வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஜந்தர்மந்தரில் தினந்தோறும் விவசாயிகள் போராட்டம் நடத்த முடிவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 22, 2021

வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஜந்தர்மந்தரில் தினந்தோறும் விவசாயிகள் போராட்டம் நடத்த முடிவு

புதுடில்லி, ஜூலை 22 விவசாயிகளின் போராட்டத்தை யொட்டி ஜந்தர் மந்தரில் பலத்த  காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

ஒன்றிய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டில்லியில் கடந்த நவம்பர் மாதம் முதல் போராட் டங்கள் நடந்து வருகிறது. பஞ்சாப், அரியானா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங் களை சேர்ந்த பல்லாயிரக் கணக்கான விவசாயிகள் டில்லி எல்லைகளை முற்றுகையிட்டு வருகின்றனர்.

இந்த விவசாயிகளுடன் ஒன்றிய அரசு 10-க்கும் மேற் பட்ட முறை பேச்சு வார்த்தை நடத்தியும் எந்த தீர்வும் எட் டப்படவில்லை. 3 புதிய சட்டங் களையும் திரும்ப பெற வேண் டும் என்பதில் விவசாயிகள் உறுதியாக இருப்பதால் இந்த பிரச்சினையில் முட்டுக்கட்டை நீடித்து வருகிறது.

இந்த நிலையில் நாடாளு மன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த 19-ஆம் தேதி முதல் நடந்து வருகிறது. இதை யொட்டி ஒன்றிய அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக நாடாளுமன்றத்துக்கு வெளியே நாள்தோறும் போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு செய்தனர்.

ஆனால் விவசாயிகளின் இந்த திட்டத்துக்கு டில்லி காவல் துறையினர் அனுமதி அளிக்க வில்லை. கரோனாவை காரணம் காட்டி விவசாயிகளுக்கு இந்த போராட் டத்துக்கான அனுமதி மறுக் கப்பட்டது.

இதைத்தொடர்ந்து தங்கள் போராட்டக்களத்தை டில்லி ஜந்தர் மந்தருக்கு மாற்ற விவசாயிகள் முடிவு செய்தனர். அதாவது வேளாண் சட்டங் களை திரும்ப பெறக்கோரி இன்று (வியாழக்கிழமை) முதல் தினந்தோறும் ஜந்தர் மந்தரில் ஆர்ப்பாட்டம் நடத் துவது என சம்யுக்தா கிசான் மோர்ச்சா முடிவு செய்துள் ளது.

விவசாயிகளின் இந்த போராட்டத்துக்கு டில்லி காவல்துறையினர் நேற்று அனுமதி அளித்து உள்ளனர். வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி அமைதியான முறையில் இந்த போராட் டத்தை நடத்த உள்ளதாக விவசாய அமைப்பு தலைவர் ஒருவர் தெரிவித்தார்.

இந்த போராட்டத்துக்காக டில்லி சிங்கு எல்லையில் இருந்து காவல்துறை பாது காப்புடன் பேருந்துகளில் விவசாயிகள் ஜந்தர் மந்தருக்கு செல்ல உள்ளனர். அங்கு விவசாயி நாடாளுமன்றம் நிகழ்ச்சியை அவர்கள் நடத்து கிறார்கள். இதற்காக நாள் தோறும் 200 போராட்டக் காரர்கள் சிங்கு எல்லையில் இருந்து ஜந்தர் மந்தர் செல்ல உள்ளதாக விவசாயிகள் தெரிவித்து உள்ளனர்.

விவசாயி களின் இந்த போராட்டத்தை யொட்டி ஜந்தர் மந்தரில் பலத்த காவல் துறை பாதுகாப்பு போடப் பட்டு உள்ளது.

No comments:

Post a Comment