புதுடில்லி. மே. 21- போராட் டத்தை நிறுத்திக் கொள்ள விவசாய சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்
கரோனா
வைரஸின் இரண்டாவது அலைக்கு எதிராக நாடு போராடி வரும் நேரத்தில், பாரதிய கிசான் யூனியன் செய்தித் தொடர் பாளர் போபால் சிங் இன்று, விவசாயிகள் தங்கள் போராட் டத்தைக் கைவிடுமாறு கேட் டுக்கொண்டுள்ளார்.
“கரோனா
காரணமாக சிங்கு எல்லையில் இரண்டு விவசாயிகள் இறந்தனர். விவசாயிகள் இப்படி இறந்து கொண்டே இருந்தால் யார் கிளர்ச்சி செய்வார்கள்? எனவே நாட்டில் நிலவும் நெருக்கடியைப் பார்க்கும் போது, நாங்கள் போராட் டத்தை தற்போதைக்கு ஒத்தி வைக்க வேண்டும் என்று விவ சாயிகளிடம் கோர விரும்புகி றேன்” என்று போபால் சிங் கூறினார்.
“விவசாயிகள்
தப்பிப் பிழைத்தால், அப்போதுதான் நாங்கள் அன்னதாதா என்று அழைக்கப்படுவோம். எங்கள் பயிர்களையும் உயிரையும் காப்பாற்ற முடிந்தால் மட் டுமே நாங்கள் அவ்வாறு அழைக்கப்படுவோம். எதிர்காலத்தில் நாங்கள் போராட்டத்தை மேற்கொள் வோம், ஆனால் இப்போது நிலைமை சரியாக இல்லை. இந்த கடினமான காலங்களில் நாம் தேசத்துடன் இருக்க வேண்டும்.” என போபால் சிங்
கூறினார்.
முன்னதாக,
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் குழுவில் அங்கம் வகித்த பஞ்சாபைச் சேர்ந்த இரண்டு விவசாயிகள், அவர் களில் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் உயிரிழந்தனர் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.
பஞ்சாப்,
ஹரியானா மற்றும் பிற இடங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் கடந்த ஆறு மாதங்களாக டில்லிக்கு அரு கிலுள்ள பல்வேறு எல்லைப் புள்ளிகளில், மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment