அண்டார்டிகா, மே 21- பூமியின் தென் துருவத்தில் அமைந் துள்ள அண்டார்டிகா கண் டமானது, முழுக்க முழுக்கப் பனிப்பாறைகளையும், பனி மலைகளையும் கொண்ட உறைநிலை குளிர்ப் பிரதேச மாகும். இந்த கண்டத்தில் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச் சியாளர்கள், ஆய்வு கூடங் களை அமைத்து ஆராய்ச்சிப் பணியில் ஈடுபட்டு வருகிறார் கள்.
இதற்கிடையில்
உலகில் தற்போது நிலவி வரும் புவி வெப்பம் காரணமாக பூமி யின் தெற்கு முனையைச் சேர்ந்த இந்த குளிர்ப் பிர தேசமான அண்டார்டிகா வில் பனிப்பாறைகளும், பனி மலைகளும் நாள்தோறும் உருகத் தொடங்கியிருக்கின் றன. இதன் காரணமாக கடல் மட்டம் உயரும் அபாயம் இருப்பதாக ஆராய்ச்சியாளர் களும், சமூக ஆர்வலர்களும் நீண்ட காலமாகவே உலக நாடுகளை எச்சரித்து வரு கின்றனர்.
இந்நிலையில்
அண்டார் டிகா கண்டத்தில் இருந்து தற் போது ஒரு பிரம்மாண்டமான பனிப்பாறை தனியாக பிரிந்து சென்றுள்ளது. இந்த பனிப்பாறை 4,320 சதுர கி.மீ. பரப்பளவு
கொண்டது என்றும் 175 கி.மீ. நீளமும்,
25 கி.மீ. அகலமும் கொண்டது என்றும் அய்ரோப்பிய விண் வெளி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. கோப்பர்நிகஸ் செண்டினல்-1 என்ற செயற் கைகோள் எடுத்து அனுப்பிய புகைப்படங்களின் மூலம், இந்த தகவல் உறுப்படுத்தப் பட்டுள்ளது.
இந்த
பனிப்பாறைக்கு ஏ-76 (கி-76) என விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர்.
பூமியில் தற்போது உள்ள பனிப்பாறை களிலேயே இது தான் மிகப் பெரியது என்று கூறப்படு கிறது.
அமெரிக்காவின்
நியூயார்க் நகரின் பரப்பளவு 1,213 சதுர கி.மீ ஆகும்.
இதன் படி இந்த ஏ-76 பனிப்பாறை யானது பரப்பளவில் அமெ ரிக்காவின் நியூயார்க் நகரை விட 4 மடங்கு பெரியது ஆகும்.
இந்திய
தலைநகர் டில்லியின் பரப்பளவு 1,484 சதுர கிமீ ஆகும். அதன்படி இந்த ஏ-76
பனிப்பாறையானது பரப்பளவில் டில்லியை விட 3 மடங்கு பெரியது ஆகும்.
இருப்பினும்
இந்த பனிப் பாறை ஏற்கனவே வெடெல் கடலில் மிதக்கத் துவங்கி இருந்ததாகவும், இதன் காரணமாக கடல் நீர்மட்டம் உயர்வதற்கு வாய்ப்புகள் குறைவு என்றும் விஞ்ஞானி கள் தெரிவித்துள்ளனர்.
மேலும்
பருவநிலை மாற் றத்திற்கும் இதற்கும் தொடர்பு இல்லை என்றும் இந்த ஏ-76 பனிப்பாறை இன்னும் சில காலத்தில் இது 2 அல்லது 3 துண்டுகளாக பிரிந்து சென்று விடும் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
No comments:
Post a Comment