கழகத் தோழர் மறைவு: பொதுச் செயலாளர் இரங்கல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, May 21, 2021

கழகத் தோழர் மறைவு: பொதுச் செயலாளர் இரங்கல்

ஒசூர், மே 21- ஒசூர் மாவட்ட கழக இளைஞரணி அமைப் பாளர் .வி.இமயவரம்பனின் தந்தை விஜய மாயாண்டி அவர்கள் ஏற் கனவே வைரஸ் காய்சலில் பாதிக்கப்பட்டு திருநெல்வேலி அரசு மருத் துவமனையில் உள் நோயாளி யாக அனுமதிக்கப்பட்டு  சிகிச்சை பெற்று தேறி வந்த நிலையில் ஒரு வாரம் முன்பு மீண்டும் அதே நிலை நீடித் ததால் தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கபெற்று சிகிச்சை பலனின்றி நேற்று (20.5.2021) 12.15 மணிக்கு மறைவுற்றார்என்ற செய்தியை அறிந்து வருந்துகி றோம்.

இவர் இயக்கத்திற்கு பெரும் ஆதரவாக இருந்தவர். தந்தை பெரியார் மீதும் அவர்களது தொண்டர்கள் மீதும் தீராப்பற்று கொண்ட தின் காரணமாக தனது அன்பு மகனுக்கு தந்தை பெரியாரின் உதவியாளராக இருந்த சுயமரியாதைச் சுடரொளி இமயவரம்பன் அவர்களின் பெயரை சூட்டி மகிழ்ந் தார்.தன் வாழ்நாள் முழுவ தும் தன் குடும்பத்தினர் கல்வி பெற நாளும் உழைத்தார்.

அவருக்கு ஒசூர் மாவட்ட கழகம் சார்பில் வீரவணக்கம்!

சிகிச்சை பெற்று வந்த நிலையில் திராவிடர் கழக பொதுசெயலாளர் வீ.அன்புராஜ், இளைஞரணி அமைப்பாளர் இமயவரம் பனைதொடர்பு கொண்டு நலம் விசாரித்தார்.

No comments:

Post a Comment