டெக்கான் கிரானிக்கல், சென்னை:
· ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் உடன் விடுதலை செய்யக் கோரி குடியரசுத் தலைவருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
எழுதிய கடிதத்தை திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு,
டில்லியில் குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் நேரில் அளித்தார்.
· எம்.ஏ. சமூக அறிவியில்
முதலாம் ஆண்டு பாடத்தில் திமுக, இடதுசாரிகள் குறித்து தவறான தகவல்களைப் பதிவிட்ட பாடக்குழுவினர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக உயர்கல்வி
அமைச்சர் க.பொன்முடி தெரிவித்துள்ளார்.
நியூ
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
· கேரளத்தில் இடதுசாரி தலைமையில் பினராயி விஜயன் இரண்டாவது முறையாக முதல்வர் பொறுப்பை ஏற்றார்.
தி
டெலிகிராப்:
· மாநில முதல்வர்களுடன் பிரதமர் நடத்திய உரையாடலில் மோடி மட்டுமே பேசுகிறார். மாநில முதல்வர்கள் பேச வாய்ப்பு இல்லை. ஒரு வழிப்பாதையாகவே உள்ளது. ஒரு சர்வாதி காரத்தை விட, இந்த தேசத்தில் இராணுவச் சட்டம் நடைமுறை யில் இருப்பதைப் போல உணர்கிறேன் என மேற்கு வங்க
முதல்வர் மம்தா குற்றம் சாட்டியுள்ளார்.
- குடந்தை
கருணா
21.5.2021
No comments:
Post a Comment