- சீ. இலட்சுமிபதி, தாம்பரம்.
பதில்: துணிச்சலான முடிவுகளை - கொள்கை அறிவிப்புகளை தொடர்ந்து அறிவித்து களத்தில் நின்றதால், பெற்ற தேர்தல் வெற்றி மூலம் சொன்னதைச் செய்வதே தி.மு.க. ஆட்சி என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் அதன்மூலம் பிரகடனப்படுத்தியுள்ளார்; பாராட்டுகள். அன்பில் பாரம்பரியமல்லவா?
- - - - -
கேள்வி: கரோனா விடயத்தில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு நீதிமன்றங்கள் தலையிடுவது, அரசைக் குறை சொல்லிக் கண்டிப்பது சரியான நடவடிக்கையா?
- மணிமேகலை, வியாசர்பாடி.
பதில்: எதற்கும் எல்லை உண்டு; சுட்டிக்காட்டி குறைகளை நிவர்த்திக்க நீதிமன்றங்களும், நீதிபதி களும் உதவுவது விரும்பத்தக்கதே; ஆனால் அது Judicial Activism என்ற எல்லை தாண்டிய நிலைக்குச் சென்று விடக் கூடாது. எதற்கும் வரம்பு உண்டல்லவா?
- - - - -
கேள்வி: கரோனா ஒழிப்பிற்கான ஆலோசனைக் குழுவில் எதிர்க்கட்சி உறுப்பினர்களையும் இடம்பெறச் செய்ததை முதல்வரின் சிறந்த நிர்வாகத்திற்கு அச்சாரமாகக் கருதலாமா?
- மல்லிகா, மாங்காடு.
பதில்: அதிலென்ன சந்தேகம். அவர் அனைவருக்கும் முதல் அமைச்சர் அல்லவா? - பொறுப்பை முழுமையாக உணர்ந்து பாரபட்சமின்றிச் செயல்படுகிறார்!
- - - - -
கேள்வி: கரோனா தொற்று கடுமையாக இருக்கும் சூழலில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் காவல் துறையினர், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்டோர் இரவு - பகல் பாராமல் ஊன், உறக்கமின்றி, குடும்பத்தை, குழந்தைகளை, மறந்து அயராது பணியாற்றிக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களை குறை கூறுவது நியாயமா?
- ப. அங்காளம்மாள், திருவொற்றியூர்.
பதில்: தவறு; பெருந்தவறு. நன்றி காட்டிப் பாராட்ட வேண்டியது - பண்புள்ளவர்கள் செயல்.
- - - - -
கேள்வி: புதுச்சேரியிலும் பாஜக தனது நரித்தனத்தை காட்டுகிறதே! ரெங்கசாமி அவர்கள் சமாளிப்பாரா?
- கலைமணி, விருத்தாச்சலம்
பதில்: நரி எப்போதாவது ‘சைவமாகுமா?’ அதன் இயல்பு மாறாது; புதுச்சேரி விரைவில் தன் தவறைத் திருத்திக் கொள்ளும் என்பதற்கான அடையாளம் துவங்கிவிட்டது.
- - - - -
கேள்வி: கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது பற்றி படித்தவர்களிடையே கூட போதிய விழிப்புணர்வு ஏற்படாததற்கு காரணம் என்ன?
- சீதாலட்சுமி, திண்டிவனம்.
பதில்: “படித்த பாமரர்கள்" - அனுதாபத்திற்குரிய படித்த தற்குறிகள்! அதற்கு மேல் கூற என்னவிருக்கிறது!
- - - - -
கேள்வி: கரோனா உக்கிரம் அடைந்ததற்கு பிரதமர் மோடி அரசின் அலட்சியமே காரணம் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கூறியிருப்பது சரியான குற்றச்சாட்டு தானா?
- கயல்விழி, காஞ்சிபுரம்.
பதில்: எவ்வளவு காலம் தான் உண்மைகளை மூடி மறைக்க முடியும்? ஆர்.எஸ்.எஸ். இருதலைக் கொள்ளி எறும்பாக நெளிகிறது - இப்போது!
- - - - -
கேள்வி: மேற்கு வங்க அமைச்சர்களை சிபிஅய் கைது செய்தபோது முதலமைச்சரே நேரடியாக முற்றுகைப் போராட்டம் நடத்தி மீட்டுச் சென்றது சரியான நடவடிக்கையா?
- சாமிநாத துரை, மதுரை
பதில்: தனது அமைச்சர்கள் மீது இப்படி ஒரு அரசியல் நடவடிக்கை பாயும் போது முதல் அமைச்சர் தூங்கிக் கொண்டா இருப்பார்? பொறுப்புள்ள ஒருவர் அதுபற்றி அங்கு சென்று விசாரிப்பது தேவைதானே! நியாயந்தானே!!
- - - - -
கேள்வி: பொது இடங்களில் ஆவி பிடிப்பது தவறு என்று அமைச்சர் அறிவித்ததற்கு சில சித்த மருத்துவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பது சரியா?
- வடிவேலன், கன்னியாகுமரி
பதில்: அறிவியல் காரணங்களைச் சுட்டி அமைச்சர் கூறினார்; பரவலாகிறது. மூக்குத் துளிகள் 2 மீட்டர் வரை செல்லும். காற்றில் 10 மீட்டர் செல்லும் என்பதாலும் ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவும் என்பதாலும் அறிவியல்பூர்வமாக கூறினார் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சு. அவர்கள்.
இதனை கண்டிப்பவர்களின் அறியாமையை என்ன சொல்வது?
- - - - -
கேள்வி: தற்போது திமுக அமைச்சரவையின் செயல்பாடுகளை எப்படிப் பார்க்கிறீர்கள்? மேலும் உங்கள் எதிர்பார்ப்பு என்ன?
- சு.அறிவன், வீராக்கன்
பதில்: மிகச் சிறப்பு, பொறுப்புணர்ந்து செயல்படுதல், அவரவர் வேலையை அவரவர் முடித்தல் என்பதும், அடக்கமும், ஆர்ப்பாட்டம் இன்றி கடமையாற்றிடும் பாங்கும் அனைவரையும் ஈர்த்துள்ளது - அரசியல் எதிரிகள் உட்பட.
மக்கள் எதிர்பார்ப்பே நம் எதிர்ப்பார்ப்பு! நிச்சயம் 5 ஆண்டில் பொற்கால சரித்திரம் உருவாகும்.






No comments:
Post a Comment