ஆந்திர மாநிலம் கிருஷ்ணபட்டினத்தில் ஆயுர் வேத மருந்து - கரோனா நோயைத் தீர்க்கும் என்று பிரச்சாரம் செய்து, இலவசமாக மருந்து அளிப்பதாகக் கூறப்பட்டதால் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. ஆந்திர மாநில முன்னாள் சுகாதார செயலாளர் டாக்டர் பி.வி. இரமேஷ் இது ஒரு மூடத்தனம் - அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கூறினார்.
துணைக் குடியரசு தலைவர் வெங்கையா நாயுடுவோ அந்த மருந்து குறித்து ஆய்வு நடத்தக் கோருகிறார். கரோனா கால கட்டத்தில் பல்லாயிரக்கணக் கில் மக்கள் கூடுகிறார்கள். ஆந்திர மாநில அரசோ கைப் பிசைந்து நிற்கிறது.
இதுதான் பா.ஜ.க.?
புதுச்சேரி மாநில பா.ஜ.க. தலைவரின் கதையைக் கேளுங்கள், கேளுங்கள். 2011-2016 தேர்தல்களில் லால்பேட்டை தொகுதியில் நின்று டெப்பாசிட்டைப் பறி கொடுத்தார். ஆனால் என்ன? எம்.எல்.ஏ. ஆகி விட்டார் எப்படி? நியமனம் மூலம் 2021 தேர்தலிலும் போட்டியிட்டார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவே வந்து பிரச்சாரம் செய்தார் - ஆனாலும் பிள்ளை பிழைக்கவில்லை.
யாரோ ஒரு சோதிடர் - புதுச்சேரிக்கு நீங்கள்தான் அடுத்த முதல் அமைச்சர் என்று சோதிடம் கணித்து, கையில் ஒரு மந்திரக் கோலையும் கொடுத்து, பெற வேண்டியதையும் பெற்றுக் கொண்டு சோதிடர் கம்பியை நீட்டினார்.
அந்த மந்திரக் கோலோடு மனிதர் அலைந்து திரிந்தார். சட்டமன்ற தேர்தலிலும் தோற்ற நிலையில், மறுபடியும் பழைய தோசை போல திரும்பியும் நியமன எம்.எல்.ஏ. பதவி கிடைக்குமா என்று அலைந்து திரிந்தார். யாரும் கண்ட கொள்ளவில்லையாம்! அந்தோ பாவம் பா.ஜ.க.! அந்தோ பாவம் ஜோதிடர்!!
இதிலும்கூட ஏழை - பணக்கார பாகுபாடா?
உலகில் உற்பத்தியாகி யுள்ள தடுப்பூசிகளில் 45 விழுக்காடு அளவுக்கு 15 விழுக்காடுள்ள பணக்கார நாடுகளே தம் வசம் வைத் துள்ளன. அதே நேரத்தில் உலக மக்கள் தொகையில் சரி பகுதியுள்ள (50%) பொருளா தாரத்தில் நலிந்துள்ள நாடு களுக்குக் கிடைத்த தடுப்பூசி விழுக்காடு வெறும் 17% தான்.
கூறுவது பா.ஜ.க. எம்.எல்.ஏ.
சாமியார் ஆளும் உத்தரப் பிரதேசத்தில் கரோனா நிலையைப் பற்றி யாரும் வாயைத் திறந்து விடக் கூடாது. அப்படியே உண் மையைக் கூறினால் - கூறுபவர் பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஆனாலும் தேசத் துரோகத் தடுப்பு சட்டம் பாயும்!
இப்படி கூறி இருப்பவர் வேறு யாரோ அல்ல உ.பி. மாநிலம் சீதாபூர் தொகுதி பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் ராகேஷ் ரத்தோர்.
முதலிடம்
கரோனா தொற்றை மிக மோசமாகக் கையாண்டதில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு பன்னாட்டு செய்தி நிறுவனமான 'தி கான்வெர் சேஷன்' முதலிடம் கொடுத் துள்ளது.
No comments:
Post a Comment