மறைவு

சிதம்பரம் மாவட்டத் தலைவர் பேரா.பூ.சி. இளங்கோவன் தம்பி சி.இளவழகன் (வயது 72) 1.5.2021 மாலை 3 மணிக்கு அண்ணாமலை நகர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கால மானார். கிராம கூட்டுறவு வங்கயில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். 1978ஆம் ஆண்டு தமிழர் தலை வர் தலைமையில் திருமணம் நடைபெற்றது. இவருக்கு அங்கயற்கண்ணி என்ற மனைவியும், பூங்குன்றன், இளையராஜா, தமிழ்மாறன் என்ற மகன்களும், இசை யமுது என்ற மகளும் உள்ளனர். இரு மகன்கள் சிங்கப்பூரில் பணியில் உள்ளனர். தமிழர் தலைவர், பூ.சி.இளங்கோவனிடம் தொலைபேசியில் 1.5.2021 மாலை 6 மணிக்கு இரங்கல் தெரிவித்தார்.

- - - - -

திருச்சி மண்டல இளைஞரணி செயலாளர் வீ.அன்புராஜாவின் தந்தை கீழவாளாடி  கிளை செயலாளர் .வீரமணி (வயது 72) அவர்கள் நேற்று (1-5-2021) அதிகாலை 2 மணி அளவில் உடல் நலக் குறைவால் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்து கிறோம். அவர்களின் இறுதி ஊர்வலம் இன்று (2.5.2021) மதியம் 12 மணி அளவில் அவரது சொந்த ஊரான கீழ வாளாடியில் நடைபெற்றது. தொடர்புக்கு: 94897 87087, 9976516006.

Comments