இந்தியாவில் ஒரே நாளில் கரோனா பாதிப்பு 4.01 லட்சம் பதிவு


 புதுடில்லி, மே 2 இந்தியாவில் ஒரே நாளில் 4.01 லட்சம் பேருக்கு கரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன.

நாடு முழுவதும் கரோனாவின் 2ஆவது அலையின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  இதனால், நாள்தோறும் கரோனா பாதிப்புகள் உச்சமடைந்து வருகின்றன.  ஒரே நாளில் 3,86,452 பேருக்கு தொற்று ஏற்பட்டு உள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று (1.5.2021) காலை தெரிவித்து இருந்தது.  இதனால், தொடர்ந்து 9ஆவது நாளாக 3 லட்சத் திற்கும் கூடுதலான பாதிப்புகளை நாடு சந்தித்தது.

இந்நிலையில், இந்தியாவில் ஒரே நாளில் கரோனா பாதிப்புகள் 4 லட்சம் எண்ணிக்கையை  கடந்து அதிர்ச்சி அளித்து உள்ளது.

இதுபற்றி மத்திய சுகாதார அமைச் சகம் வெளியிட்டு உள்ள செய்தியில், நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 4 லட்சத்து ஓராயிரத்து 993 பேர் கரோனா பாதிப்புக்கு ஆளாகி உள் ளனர்.  இதனால் மொத்த கரோனா பாதிப்பு 1 கோடியே 91 லட்சத்து 64 ஆயிரத்து 969 ஆக உயர்வடைந்து உள்ளது.

நாட்டில் 3,523 பேர் உயிரிழந்து உள்ளனர்.இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 2,11,853 ஆக உயர்ந்து உள்ளது.  கடந்த 24 மணிநேரத்தில் 2 லட்சத்து 99 ஆயிரத்து 988 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதனால் மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 1 கோடியே 56 லட்சத்து 84 ஆயிரத்து 406 ஆக உயர்வடைந்து உள்ளது.  இதுவரை மொத்தம் 32,68,710 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாட்டில் இதுவரை போடப்பட்ட கரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 15 கோடியே 49 லட்சத்து 89 ஆயிரத்து 635 ஆக உள்ளது என்று தெரிவித்து உள்ளது.  நாட்டில் முதன்முறையாக கரோனா பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சம் கடந்து அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

தமிழகம்

தமிழகத்தில் நாளுக்கு நாள் மிக வேகமாக கரோனா பாதிப்பு உயர்ந்து வருகிறது. அந்தவகையில் நேற்று (1.5.2021) ஒரே நாளில் 19,588 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப் பதாவது:- தமிழகத்தில் நேற்று புதிதாக  19 ஆயிரத்து 588  பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா பாதிப்பில் இருந்து இன்று 17,164 பேர்டிஸ்சார்ஜ்செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 10,54,746 பேர்.  மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 2,24,24,611 ஆகும். நேற்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 1,45,731 ஆகும். மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 11,86,344 ஆக உள்ளது.

கரோனாவிற்கு 147 பேர் உயிரிழந் தனர். 55 பேர், தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுவந்தவரா வார், 92 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள் ஆவர்.  மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 14,193 ஆக உள்ளது. சென்னையில் மட்டும் மொத்தம் 4791 பேர் உயிரிழந்துள்ளனர்.

முக்கியப் பிரச்சினையாக சுவாசப் பிரச்சினை, மாரடைப்பு, கோவிட் நிமோனியா ஆகியவை அதிகளவு மரணத்துக்குக் காரணமாக உள்ளன. இன்று உயிரிழந்தவர்களில் 114 பேர் நீண்டகால நோயால் பாதிக்கப்பட்டிருந் தவர்களாவர். எவ்வித பாதிப்பும் இல் லாதவர் 33 பேர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments