ஏட்டுத் திக்குகளிலிருந்து...

 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

·   கரோனா தொற்றின் பாதிப்பு இந்தியாவில் சோகமான நிலையை தோற்றுவித்துள்ளது. அமெரிக்கா அனைத்து உதவிகளையும் இந்தியர்களுக்கு அளிக்கும் என அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் உறுதி.

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

·     குஜராத் பாரூச் மாவட்டத்தில் மருத்துவமனை தீ விபத்து காரணமாக 12 கரோனா நோயாளிகள் உடல் கருகி சாவு; டில்லி பாத்ரா மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறைக் காரணாமாக 12 கரோனா நோயாளிகள் இறப்பு.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

·     கரோனா தடுப்புக்கான அவசர நடவடிக்கையில் சுயமாக முடிவெடுக்கும் அமைச்சர்கள், மருத்துவர்கள், நிபுணர்கள் கொண்ட குழுவை பிரதமர் மோடி உடன் அறிவித்து அவர்கள் பணியாற்ற முழு சுதந்திரம் அளித்தால்,  நோய் பரவலை தடுக்க முடியும் என காங்கிரஸ் தலைவர் .சிதம்பரம் கருத்து.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

·     கோவிஷீல்டு தடுப்பூசி தயாரிக்கும் சீரம் இன்ஸ்டிடியூட் தலைவர் ஆதர் பூனாவாலா, இங்கு அரசியல் தலைவர்களின் தலையீடு அதிகரித்துவருவதால்,  இந்தியாவில் இருந்து லண்டனுக்கு சென்று விட்டார். அங்கிருந்து தடுப்பூசி தயாரிப்பது குறித்து முடி வெடுப்பதாக அறிவித்துள்ளார்.

தி டெலிகிராப்:

·     கரோனா குறித்த அனைத்து எச்சரிக்கையையும் மோடி அரசு அலட்சியம் செய்ததன் விளைவை நாடு இன்று அனுபவிக்கிறது. மோடியே இதற்குக் காரணம் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

பி.பி.சி. நியூஸ் தமிழ்:

·             கரோனா நெருக்கடியை சமாளிக்கும் விதத்தில் சரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என கருதுகிறார்கள் மக்கள். நரேந்திர மோடி தலைமையிலான அரசின் மீதான விமர்சனங்கள் வரலாறு காணாத அளவுக்கு வலுவடைந்து இருக்கின்றன. முதல்முறை யாக நரேந்திர மோடி மற்றும் அவரது சகாக்கள் தங்கள் பதவியை விட்டு விலகிட வேண்டும் என சமூக வலைதளங்களில் அழுத்தமாக குரல்கள் ஒலிக்கத் தொடங்கி இருக்கின்றன.

- குடந்தை கருணா

2.5.2021

Comments