செய்தியும், சிந்தனையும்....!

வெடிக்கப்போவது

சமையல் எரிவாயு விலை மேலும் ரூ.25 கூடி ஒரே மாதத்தில் ரூ.125 அளவுக்கு உயர்வு.

விஷயம் வெடிக்கப் போறது - எதுவும் உச்ச நிலையை அடைந்தால் அதுதானே நடக்கும்!

யாருக்கு நல்ல பிள்ளை?' 

ஜெர்மனி - கொலோன் பல்கலைக் கழகத்தில் தமிழியல் துறை மூடப்படும் அவல நிலை!

.தி.மு.. அரசு வாக்குறுதியளித்த ரூ.1.24 கோடியை வழங்காதது ஏன்? அரசு செலவில் எவற்றையெல்லாம் செய்கிறது என்பதை நாடு அறியும்.

செம்மொழி நிறுவனத்தைச் சிதைக்கும் அரசு - பா...வுக்குநல்ல பிள்ளையாக' நடந்து கொள்கிறதோ!

பெற்ற மனம்! 

மகனுக்குத் தன் சிறு நீரகத்தைக் கொடுத்து மறுவாழ்வு அளித்த தாய் - ஸ்டான்லி மருத்துவமனையில் இது நடந்தது.

பெற்ற மனம் கேட்குமா?

பிடிமானம்!

சிறுபான்மையினரின் ‘‘வாக்குகளைப் பெற கேரளாவில் பா... வியூகம்.

தலையை இடிக்க முடியவில்லை என்றால் காலைப் பிடி!

இரண்டாம்

(ª)கட்டப் பேச்சு! 

.தி.மு..வுடன் பா... இரணடாம் கட்டப் பேச்சுவார்த்தை.

எழுத்துப் பிழையோ! கட்டவா - கெட்டவா?

எங்களப்பன் குதிருக்குள்?

.தி.மு..வுடன் தொகுதி பங்கீடு - பேச்சுவார்த்தையில் இழுபறி இல்லை : - பா... தலைவர் முருகன்.

, எங்களப்பன் இரண்டாம் நம்பர் குதிருக்குள் இல்லை என்கிறாரோ!

பதுக்கியது வெறும் பொருள்களைத்தானா?

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் திருமண மண்டபத்தில் .தி.மு..வினர் பதுக்கிய பரிசு பொருள்கள் பறிமுதல்.

பதுக்கியது வெறும் பொருள்களைத்தானா? இது வெறும் சோளப் பொரிதான். கண்டுபிடித்தது கை மண்ணளவுதான் - கண்டுபிடிக்கப்பட வேண்டியதோ உலகளவு!

Comments