இலங்கை, நேபாளத்திலும் ஆட்சியமைக்க பா.ஜ.க. விரும்புகிறதாம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, February 15, 2021

இலங்கை, நேபாளத்திலும் ஆட்சியமைக்க பா.ஜ.க. விரும்புகிறதாம்

திரிபுரா பாஜக முதலமைச்சரின் சர்ச்சை பேச்சு

அகர்தலா, பிப். 15- அவ்வப் போது சர்ச்சைக்குரிய வகை யில் பேசுவதை வாடிக்கை யாகக் கொண்டவர் திரிபுரா முதல் அமைச்சர் பிப்லாப் தேப். வழக்கமாக இந்திய அரசியல் குறித்தும், தனது மாநில விவகாரங்கள் குறித்து பேசி சர்ச்சையில் சிக்கிக் கொள்ளும் இவர், இம்முறை சர்வதேச அரசியல் குறித்து சலசலப்பை ஏற்படுத்தியுள் ளார்.

திரிபுரா தலைநகர் அகர் தலாவில் நேற்று முன்தினம் நடந்த பொதுக்கூட்டம் ஒன் றில் மாநில முதல்அமைச்சரும், பா.ஜனதா தலைவர்களில் ஒருவருமான பிப்லாப் தேப் உரையாற்றினார். அப்போது அவர் இந்தியாவையும் தாண்டி அதிகாரத்தை பிடிக்க பா. ஜனதா விரும்புவதாக கூறி னார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘தற்போதைய உள்துறை அமைச்சரான அமித்ஷா, பா.ஜனதா தேசிய தலைவராக இருந்தபோது அகர்தலா மாநில அரசு விருந் தினர் மாளிகையில் பல்வேறு தலைவர்களுடன் கலந்துரை யாடினார். அப்போது அவர், இந்திய மாநிலங்களை தாண்டி நேபாளம் மற்றும் இலங்கை யிலும் ஆட்சியை விரிவுபடுத்த கட்சி திட்டமிட்டு வருவதாக தெரிவித்தார்என்று கூறி னார்.

திரிபுரா முதல்அமைச்ச ரின் இந்த பேச்சு மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இறையாண்மை மிகுந்த நேபாளம், இலங்கை நாடுகளுக்கு எதிராக ஜன நாயக விரோதமாக பேசியி ருக்கும் முதல்அமைச்சர்மீது நடவடிக்கை எடுக்க வேண் டும் என எதிர்க்கட்சிகள் கூறி யுள்ளன.

இது அண்டை நாட்டு உள்விவகாரங்களில் தலையி டும் செயல் எனவும், இதனால் இந்தியாவின் வெளிநாட்டு கொள்கை பாதிக்கப்படும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்டு கட்சி குற்றம் சாட்டி யுள்ளது. முதல்அமைச்சராக உள்ள ஒருவரிடம் இருந்து இதுபோன்ற கருத்துகள் வரு வது கெட்ட வாய்ப்பானது என கூறியுள்ள காங்கிரஸ் கட்சி, இது குறித்து விசாரிக்க வேண்டும் எனவும் வலியு றுத்தி உள்ளது என்பது குறிப் பிடத்தக்கது.

No comments:

Post a Comment