மடத்துக்குளம் குமரலிங்கத்தில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்

குமரலிங்கம், பிப். 15-- தந்தை பெரியாரின் 142ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் தாராபுரம் கழக மாவட்டம் சார்பில் மடத்துக்குளம் வட்டம் குமரலிங்கத்தில் 05.02.2021 மாலை 6.30 மணியளவில் நடைபெற்றது.

நிகழ்விற்கு குமரலிங்கம் நகர கழக அமைப்பாளர் கி.மாரியப்பன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சண்முகம் வரவேற்புரை ஆற்றினார்.மாவட்ட தலைவர் கிருஷ்ணன், அமைப்பாளர் மயில் சாமி, இளைஞரணி தலைவர் மாயவன், பழனி கழக பொறுப்பாளர் இரணியன் ஆகியோர் கூட்டத்தின் துவக்கத்தில் உரையாற்றினர்.சிறப்பு அழைப்பாளராக குமரலிங்கம் நகர திமுக செயலாளர் செங்கமலை பங் கேற்றார்.

நிகழ்வில் பங்கேற்று சிறப்புரை யாற்றிய கழக பேச்சாளர் தஞ்சை இரா.பெரியார் செல்வன் குறிப்பிட் டதாவது;

தந்தை பெரியார்,கர்மவீரர் காம ராஜர், அறிஞர் அண்ணா,முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகியோர் மேற் கொண்ட நடவடிக்கையால் தான்  தமிழகத்தில் சமூக மாற்றம் உருவா கியது. இந்த மாற்றம் வேறுபாடின்றி சமத்துவமாக அனைவரும் கல்வி, வேலைவாய்ப்பு பெறும் நிலையை உருவாக்கியது.

2030 ஆம் ஆண்டுக்குள் இந்தியா முழுவதும் உயர்கல்வி துறையில் 50 சதவிகிதத்தை எட்டுவது தான் நோக் கம் என்கிறது மத்திய அரசு! ஆனால் 2021 ஆம் ஆண்டிலேயே உயர்கல்வி துறையில் தமிழ்நாடு 50 சதவிகிதத்தை எட்டி சாதனை படைத்த மாநிலமாக திகழ்ந்து வருகிறது.மற்ற மாநிலங்கள் உயர்கல்வி துறையில் சராசரியாக 20.4 விழுக்காடு என்ற அளவிலேயே தான் இருக்கிறது.

தமிழகத்தில் 60 ஆண்டு காலம் திராவிட இயக்கம் ஆட்சி நடத்தி யுள்ளது. அந்த கால கட்டங்களில் உலக வங்கியில் பெற்ற கடன் 1 லட்சம் கோடியாகும்,ஆனால் கடந்த 4 ஆண்டுகளில் தமிழகத்தை ஆளும் அரசு உலக வங்கியில் 4 லட்சம் கோடி கடன் பெற்றுள்ளது.எல்லாம் அடகு வைக்கப்பட்டுள்ளது.

நேரு முதல் மன்மோகன் சிங் வரை உருவாக்கப்பட்ட அனைத்து பொதுத் துறை நிறுவனங்களும் மத்திய அரசால் தனியார்மய படுத்தபட்டு வருவதோடு,தற்போது இயற்றிய மூன்று வேளாண் திருத்த சட்டங் களின் மூலம் விவசாயத்தையும், சிறு, குறு வியாபாரங்களையும் அழித்து கார்பரேட்டுகளுக்கு நாட்டை தாரை வார்க்கும் மத்திய அரசின் போக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.மத்திய, மாநில அரசுகள் மக்கள் விரோத தன்மையோடு செயல்பட்டு வருவ தால் நாடு மிக பெரிய ஆபத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

தமிழக மக்கள் வருகின்ற சட்ட மன்ற தேர்தலில் மத்திய,மாநில அரசு களுக்கு சரியான பாடம் கற்பிக்கும் வகையில் சிந்தித்து செயல்பட வேண்டும்! தமிழகத்தில் மாற்றத்தை உருவாக்க மிடுக்கோடு மக்களை சந்தித்து வரும் திமுக தலைமையி லான மதச்சார்பற்ற முற்போக்கு கூட் டணியை தமிழக மக்கள் ஆதரித்து வெற்றி பெற செய்யவேண்டும்.இவ் வாறு அவர் குறிப்பிட்டார்.

கூட்டத்தின் நிறைவாக திராவிடர் தொழிலாளர் சங்க பொறுப்பாளர் மடத்துக்குளம் சிவக்குமார் நன்றி கூறினார்.மாவட்ட கழகத்தின் அனைத்து அணியினர் மற்றும் பொதுமக்கள் கூட்டத்தில் திரளாக பங்கேற்றனர்.

Comments