திண்டுக்கல்லில் "திராவிடம் வெல்லும்" பிரச்சாரக் கூட்டம்

திண்டுக்கல், பிப். 15- திண்டுக்கல் மண்டல திராவிட மாணவர் கழகம் சார்பில் 6.2.2021 அன்று திராவிடம் வெல்லும் என்னும் தலைப்பில் மாநில மாணவர் கழக துணை அமைப்பாளர் வழக்குரைஞர் .தில்ரேசு பானு தலைமையில் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் திண்டுக்கல் மண்டல மாணவர் கழக செயலாளர் பெரியார்மணி வரவேற்புரை ஆற்றி னார். மாநில மாணவர் கழக அமைப் பாளர் இரா.செந்தூர் பாண்டியன் தொடக்க உரையாற்றினார். இக்கூட் டத்தில் சிறப்புரையாக தஞ்சை இரா.பெரியாரசெல்வன்திராவிடம் வெல் லும்என்ற தலைப்பில் கருத்துரை ஆற்றினார்.கழக மாநில அமைப்பா ளர் இரா.குணசேகரன், மாநில அமைப்புச் செயலாளர் மதுரை வே.செல்வம், திண்டுக்கல் மாவட்ட தலைவர் வீரபாண்டியன் ஆகியோர் உரையாற்றினார்கள்.

இக்கூட்டத்தில் மண்டல தலை வர் மு.நாகராசன், மண்டல செயலா ளர் கருப்புச்சட்டை நடராசன், திண் டுக்கல் மாவட்ட தலைவர் இரா.வீரபாண்டியன், திண்டுக்கல் மாவட்ட செயலாளர் பெ.கிருஷ்ண மூர்த்தி, பழனி மாவட்ட தலைவர் பெரியார் இரணியன், பழனி மாவட்ட செயலாளர் சி.இராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர்.

மாணவர் கழகம் சார்பாக .திண் டுக்கல் மாவட்ட மாணவர் கழக செயலாளர் திலீபன், திண்டுக்கல் மாவட்ட மாணவர் கழக .அமைப் பாளர் தமிழ்மாறன், சேலம் மாவட்ட இளைஞரணி பொறுப்பாளர் திரா விடமுருகன், மாவட்ட மாணவர் கழக தலைவர்  பேங்க் கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 திண்டுக்கல் நகர செயலாளர் ஆனந்த முனிராசன் புதிதாக கழகத் தில் இணைந்த அனைத்து தோழர் களுக்கும் பயனாடை அணிவித்து சிறப்பித்தார்.

திராவிட தொழிலாளர் பேரவை தலைவர் .மோகன், பொதுக்குழு உறுப்பினர் நாராயணன், மாவட்ட துணைத் தலைவர் .கருணாநிதி, .. மாவட்ட செயலாளர் மு.செல்வம், .. அமைப்பாளர் சிலுக்குவார்பட்டி அழகேசன், மாவட்ட அமைப்பாளர் பழ.இராசேந்திரன், திண்டுக்கல் நகர தலைவர் .மாணிக்கம், தொழிலா ளர் அணியைச் சேர்ந்த சிதம்பரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பழனி .. மாவட்ட தலைவர் திராவிட செல்வன், பழனி ஒன்றிய செயலாளர் சி.பாலசுப்பிரமணி,  மாணவர் கழகத்தைச் சேர்ந்த அருண், விக்ரம் செல்வா, எடிசன் ராஜா, போடி மாணவர் கழக நகர செயலா ளர் பால்பாண்டி ஆகியோர் கலந்து கொண்டு பெரியாரிய இயக்கத்தில் சேர்ந்தது பெருமைக்குரியது என பேசினார்கள்.

மாவட்ட இளைஞரணி செயலா ளர் ஜி.எச்.பாண்டி, மாவட்ட இளை ஞரணி அமைப்பாளர் இன்பண்ட் சந்தோஷ்குமார், திண்டுக்கல் மாவட் டத்தில் தோழர் காஞ்சித்துரையின் பெரும் முயற்சியில் புதிதாக பெரியா ரிய உணர்வாளர்கள் அய்யாமணி, வண்ணம்பட்டி வேல்முருகன், பகல வன் வீரமணி சையது, டாக்டர் கந் துரு சன்டு, லெனின், சின்னாளபட்டி சிவப்பிரகாசம், ராஜா தளபதி, காளி யப்பன், புருஸ்லி பெரியார், முஸ்தபா ரியாஜ், ஜெயபிரகாஸ், பேங்க் ஆனந்த், சுகவனம், மெடிக்கல் பாலா ஆகி யோர் கலந்துகொண்டனர்.

மாவட்ட துணைத் தலைவர்

.கருணாநிதி அனைவருக்கும் சிற் றுண்டி வழங்கி சிறப்பித்தார். மாவட்ட இணைச் செயலாளர் கே.ஆர்.காஞ்சித்துரை நன்றியுரையாற்றினார்.

திராவிடர் கழக மாநில அமைப் பாளர் உரத்தநாடு குணசேகரன் கீழ்காணும் புதிய பொறுப்பாளர்களை நியமித்தார்.

புதிய பொறுப்பாளர்கள்

திண்டுக்கல் ஒன்றிய தலைவர்: புருஸ்லி பெரியார், திண்டுக்கல் ஒன் றிய அமைப்பாளர்: காளிமுத்து, திண் டுக்கல் ஒன்றிய துணை செயலாளர்: தரும.பாக்கியராஜ், திண்டுக்கல் மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர்: தமிழவன், திண்டுக்கல் மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர்: கோனுர் தமிழரசன், திண் டுக்கல் நகர இளைஞரணி தலைவர்: பகலவன் வீரமணி, திண்டுக்கல் நகர இளைஞரணி செயலாளர்: ராம் குமார், திண்டுக்கல் நகர இளைஞரணி அமைப்பாளர் சந்திரசேகரன் நியமிக் கப்பட்டனர்..

Comments