காவிரியின் குறுக்கே கருநாடகம் அணை கட்ட அனுமதிக்கக் கூடாது: ஆளுநர் உரை

சென்னை, பிப்.2 - காவிரியின் குறுக்கே அணை கட்டும் மேகதாது திட்டத்தை நிராகரிக்க வேண்டும் என்று மத்திய அரசைக் கேட்கும் வேண்டுகோள் ஆளுநர் உரையில் இடம்பெற்றுள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (2.2.2021) தமிழக ஆளுநர் உரை நிகழ்த்தினார். அதில் காவிரியின் குறுக்கே அணை கட்டும் மேகதாது திட்டத்தை மத்திய அரசு நிராகரிக்கவேண்டும் என்று கேட்கப்பட்டுள்ளது.

சட்டப்பேரவை கூடியதும் ஆளுநர் தனது 58 பக்க உரையை ஆங்கிலத்தில் நிகழ்த்தினார். அதைத் தொடர்ந்து பேரவைத் தலைவர் .தனபால் அவர்கள் அதன் தமிழாக்கத்தை வாசித்தார்.

Comments