2021 ஆம் ஆண்டிற்கான சட்டமன்றக் கூட்டத் தொடர்: தமிழக ஆளுநர் உரையைப் புறக்கணித்து தி.மு.க. - காங்கிரஸ் வெளிநடப்பு

பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரை விடுதலை செய்வதில்

தமிழக ஆளுநரின் அலட்சியம்: மு..ஸ்டாலின் பேட்டி

 சென்னை, பிப்.2 - தமிழக சட்டப்பேரவையின் 2021 ஆம் ஆண்டின் முதல் கூட்டத் தொடரில் ஆளுநர் உரையாற்றுவதற்கு முன்பாக எதிர்க்கட்சித் தலைவர் மு..ஸ்டாலின் அவர்களுக்குப் பேச அனுமதி மறுக் கப்பட்டதால், தி.மு.. சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளுநர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.

தமிழக சட்டமன்றத்தின் 2021 ஆம் ஆண்டுக்கான முதல் கூட்டத் தொடர் இன்று (2.2.2021) காலை 11 மணியளவில் சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கியது. சட்டமன்ற கூட்டத் தொடர் தொடங் கியதும், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரை யாற்றத் தொடங்கியபோது, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு..ஸ்டாலின் அவர்கள் எழுந்து பேச  அனுமதி கேட்டார். அதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. அனுமதி மறுக்கப்பட்டதால், மு..ஸ்டாலின் அவர்கள் தலைமையில் தி.மு.. சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஆளுநர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.

புறக்கணிப்பு - வெளிநடப்பு

இன்று சட்டமன்றத்திற்கு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் மத்திய பா... அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலும், விவசாயிகளுக்கு ஆதரவாகவும், பச்சை தலைப்பாகை அணிந்து வந்திருந்தனர். அவர்களுக்குப் பேச அனுமதி மறுக் கப்பட்டதால் ஆளுநர் உரையை புறக்கணித்தனர்.

எதிர்க்கட்சித் தலைவர்

மு..ஸ்டாலின் பேட்டி

ஆளுநர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்த பின்னர், அவைக்கு வெளியே செய்தியாளர் களுக்கு மு..ஸ்டாலின் பேட்டி அளித்தார்.

முதலமைச்சர் திரு.பழனிசாமி, துணை முதலமைச்சர் .பன்னீர்செல்வம் மற்றும் .தி.மு.. அமைச்சர்களின்மீது ஆதாரங்களுடன் 22.12.2020 அன்று, ஆளுநரிடம் நேரில் கொடுக்கப்பட்ட 97 பக்க ஊழல் புகார்கள்மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், 29 ஆண்டுகளாகச் சிறையில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்யும்படி உச்சநீதிமன்றமே உத்தரவிட்டும், இது வரை அவர்களை விடுதலை செய்யாமல், அமைச் சரவைத் தீர்மானத்தைக் கிடப்பில் போட்டிருக்கும் தமிழக ஆளுநரின் செயலைக் கண்டித்து, மக்கள் விரோத .தி.மு.. அரசின் ஆளுநர் உரையை திராவிட முன்னேற்றக் கழகம் புறக்கணிக்கிறது.

அரசின் கொள்கை விளக்கக் குறிப்புகளை - ‘‘பொய்யுரைகளாக''  மாற்றிய அநியாயம் .தி.மு.. ஆட்சியில் நடைபெற்று - சட்டமன்றத்தால் நிறை வேற்றப்பட்டநீட்' தேர்விலிருந்து  விலக்கு மசோதா விற்கு ஒப்புதல் பெற முடியாமல், 16 மாணவ, மாண வியர் தற்கொலைக்கு வித்திட்டுள்ளது .தி.மு.. ஆட்சி! ‘நீட்' விலக்கு மசோதா நிராகரிக்கப்பட்ட தகவலைச் சட்டமன்றத்திற்கே மறைத்த ஜனநாயக விரோத ஆட்சி .தி.மு.. ஆட்சி.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்தது, மூன்று வேளாண் சட்டங்களை ஆதரித்து வாக்களித்து - இப்போது இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் மத்திய பா... ஆட்சிக்குத் துணை போவது,

அகில இந்திய கோட்டாவிற்கு ஒதுக்கப்படும் மருத்துவக் கல்வி இடங்களில் 50 சதவிகித இட ஒதுக் கீட்டைப் பெறாமல் வஞ்சித்தது - அரசு மருத்துவர் களுக்கு உரிய இட ஒதுக்கீட்டையும் கொடுக்காமல் மறுத்தது - புதிய கல்விக் கொள்கையை மறைமுகமாக ஆதரிப்பது,

ஊழல் செய்வோருக்கே இந்த ‘‘ஆட்சி'' என்ற வகையில், லோக் ஆயுக்தா, உள்ளாட்சிகளின் ஊழல்களை விசாரிக்கும் ஆம்புட்ஸ்மேன் அமைப்பு ஆகியவையெல்லாம் முடக்கப்பட்டு, விவசாயிகள், வணிகர்கள், தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள், இளைஞர்கள், மீனவர்கள், நெசவாளர்கள், ஏழை எளிய நடுத்தர மக்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களுக்கும், ஜனநாயக மாண்புகளுக்கும், அரசியல் சட்டத்திற்கும் இழுக்கை ஏற்படுத்திய .தி.மு.. ஆட்சியின் கடைசி ஆளுநர் உரைக்கான இந்தக் கூட்டத் தொடரை திராவிட முன்னேற்றக் கழகம் புறக்கணிப்பது என முடிவெடுத்திருக்கிறது என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு..ஸ்டாலின் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Comments