முதல் குற்றவாளி என்ன வாதி?

சசிகலா ஒரு குற்றவாளி - ஊழல்வாதி - அந்த அடிப்படையில் சிறைக்குச் சென்றார் - அவர் விடுதலையாகிறார். ஊழல்வாதியா? தியாகியா? அவருக்கு ஏன் இந்த வரவேற்பு என்று பக்கத்துக்குப் பக்கம் இன்று (16.2.2021) வெளிவந்த 'துக்ளக்' எழுதிக் குவித்துள்ளது.

ஒரே ஒரு கேள்வி!

நம்பர் ஒன் குற்றவாளியைப்பற்றி ஏன் பேசுவதில்லை - எழுதுவதில்லை? மறைந்த ஜெயலலிதாவிற்குக் கோவில் கட்டுவதைப்பற்றி ஏன் வாய்த் திறக்கவில்லை?

செல்வி ஜெயலலிதா மரணம் அடைந்துவிட்டதால்தானே தண்டனையை அனுபவிக்கவில்லை. இதுதானே உண்மை!

அவர் நம்பர் ஒன் குற்றவாளிதான் (Accused Number One) என்பதுதானே நீதிமன்றத்தின் தீர்ப்பு!

இதைத் திட்டமிட்டு மறைப்பானேன்? சசிகலா ஊழல்வாதி என்றால், ஜெயலலிதா என்ன வாதியாம்?

பார்ப்பனப் பாரதி கூறுவதுதான் - சூத்திரனுக்கொரு நீதி - தண்டச் சோறுண்ணும் பார்ப்பானுக்கு வேறொரு நீதியா?

Comments