இந்தியன் எக்ஸ்பிரஸ்:
· அசாமில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத் தால் குடியுரிமை திருத்த மசோதாவை நிறைவேற்ற மாட்டோம் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கூறினார்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
· விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றும்வரை மத்திய அரசை நிம்மதியாக இருக்க விட மாட்டோம். நாடு முழுவதும் விவசாய அமைப்புகளின் சார்பில் ஆதரவு திரட்டுவோம் என பாரதீய கிஷான் சங்கத் தலைவர் ராகேஷ் திகாயத் தெரிவித்தார்.
· மாநிலங்களவையில் பிரதமர் மோடி கண்ணீர் சிந்தினார். வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிய 200 விவசாயிகள் இறந்ததற்காக அல்ல; அல்லது எந்தவித குற்றமும் செய்யாமல் சிறையில் வாடும் ஸ்டான் சுவாமி போன்றோர்க்காகவும் அல்ல. மாறாக காங்கிரஸ் கட்சியின் குலாம் நபி ஆசாத் மாநிலங்களவையின் பதவிக் காலம் முடிந்து எல்லோரையும் போல் செல்வதை எண்ணி கண்ணீர் சிந்தும் நாடகத்தை அரங்கேற்றினார் என மூத்த எழுத்தாளர் டி.ஜே.எஸ்.ஜார்ஜ் குறிப்பிட்டுள்ளார்.
பிபிசி நியூஸ் தமிழ்:
· பிப்ரவரி 15 மற்றும் 16 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட நள்ளிரவு முதல் ஃபாஸ்ட்டேக் அட்டை இல்லாத அல்லது ஃபாஸ்டேக் அட்டை ஒட்டப்பட்டும், அது இயக்கத்தில் இல்லாத வாகனங்கள் சுங்கச் சாவடிகளில் நுழைந்தால், அந்தந்த வாகனங்களுக்கு என்று ஏற்கெனவே வரையறுக்கப்பட்டுள்ள சுங்கக் கட்டணத்தை விட இரண்டு மடங்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும் என இந்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் அறிவித்துள்ளது.
தி டெலிகிராப்:
· பிரதமர் மோடி தமிழ் நாடு மற்றும் கேரளாவிற்கு ஒரு நாள் பயணம் வந்ததை எதிர்த்து ‘திரும்பிப் போ மோடி’ என தமிழகத்திலும், ’போமோனே மோடி’ என கேரளாவிலும் டிவிட்டர் பதிவுகள் முதல் இடத்தைப் பிடித்தன.
- குடந்தை கருணா
15.2.2021
No comments:
Post a Comment