பெரியார் கேட்கும் கேள்வி! (248)

மனிதன் மேலும் தெளிவு பெற வேண்டும். ஒருவன் உயர்வு, தாழ்வு; ஒருவன் காலை ஒருவன் கழுவிக் குடிப்பது என்பது முட்டாள்தனம், அறியாமையல்லவா? அவனுக்கும், இவனுக்கும், எவனுக்கும் பிறவித் தத்துவத் தில் எவ்விதப் பேதமுமில்லை. இருவருக்குமே நெருப்பு சுடத்தான் செய்யும். உப்பு கரிக்கத்தான் செய்யும், வேம்பு கசக்கத்தான் செய்யும். இப்படியிருந்தும், பிறவியின் பெயரால் ஜாதி வித்தியாசம் இருந்து வரக் காரணம் என்ன என்பதை உங்கள் சொந்தப் புத்தியைக் கொண்டு சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?

- தந்தை பெரியார், “பெரியார் கணினி”, தொகுதி - 1

மணியோசை


Comments