இந்தியாவில் கரோனா தடுப்பூசி போடுவதில் தமிழகத்துக்கு 15ஆவது இடம்

விழிப்புணர்வு ஏற்படுத்தாததே காரணம் என குற்றச்சாட்டு

சென்னை, பிப்.1 இந்தியாவில் கோவாக்சின் மற்றும் கோவி ஷீல்டு தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டிற்கு பயன்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்தது. இதன்படி, தமிழகத்துக்கு 5.36 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி மற்றும் 20 ஆயிரம் கோவாக் சின் தடுப்பூசிகள் வந்தது. இதில் முதல்கட்டமாக மருத்துவ பணியாளர்கள் 6 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த 16ஆம் தேதி கரேனா தடுப்பூசி போடும் பணியை முதல்வர் தொடங்கி வைத்தார்கரோனா தடுப்பூசி போடும் கடந்த 30ஆம் தேதியுடன் 15 நாட்களை நிறைவடைந்துள்ள நிலையில் தமிழகத்தில் 1 லட்சத்து5 ஆயிரத்து 821 சுகாதார பணியாளர்களுக்கு மட்டுமே கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதுஆனால் தமிழகத்தில் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள சுகாதார பணியாளர்கள் தயக்கம் காட்டுவது தெரியவந்துள்ளது. தமிழகத்தில் தினசரி 29 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான வசதிகள் உள்ளது. ஆனால் 5 முதல் 10 ஆயிரம் பேர் மட்டுமே தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர். இந்த 15 நாட்களில் அதிகபட்சமாக 18ஆம் தேதி 10 ஆயிரம் பேருக்கும், குறைந்தபட்சமாக 24ஆம் தேதி 2494 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 15 தமிழகத்தில் 2.90 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும். ஆனால் 1 லட்சம் பேருக்கு மட்டும் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக தடுப்பூசி வழங்கும் பணியில் பெரிய மாநிலங்களில் தமிழகம் முழுவதும் பின்தங்கி உள்ளது. பீகார், அரியானா, ஓடிசா, அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தமிழகத்தை விட அதிகம் பேரும் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு போதிய அளவில் விழிப்புணர்வு, நம்பிக்கையை மக்களிடம் ஏற்படுத்த அரசு தவறிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 

தமிழகத்தில் புதிதாக 508 பேருக்கு கரோனா

சென்னை, பிப்.1 தமிழகத்தில் புதிதாக 508 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 6 பேர் மரணம் அடைந்துள் ளனர்.  தமிழகத்தில் நேற்று மட்டும் 54,043 சோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இதில் 508 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது வரை லண்டனில் இருந்தவர்கள் மற்றும் தொடர்பில் இருந்த 46 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 4 பேருக்கு உருமாறிய கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதைச் சேர்த்து தமிழகத்தில் 8,38,340 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 523 பேர் குணமடைந்து உள்ளனர்.

Comments