திருப்பூரில் 17 வயது சிறுமியிடம் பாலியல் வன்முறை பா.ஜ.க.வை சேர்ந்தவர் போக்சோ சட்டத்தில் கைது

திருப்பூர், பிப்.1 திருப்பூர் மணிய காரம்பாளையம் பகுதியில் 17 வயது சிறுமியிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்ட வழக்கில் பாஜக பொறுப் பாளர்  ராஜ் (வயது 37) என்பவர் போக்சோ சட்டத்தின்கீழ் காவல் துறையினரால் கைது செய்யப் பட்டார்.

திருப்பூர் மணியக்காரம்பாளையம் பகுதி பா...வை சேர்ந்த ராஜ் என்பவர் பனியன் நிறுவனத்தில் தையல் ஒப்பந்தக்காரராக பணியாற்றி வருகிறார். இவர் 12ஆம் வகுப்பு பயிலும் 17 வயது மாணவியை விடு முறையில் பணிக்கு அழைத்து சென்று வந்துள்ளார். அப்போது சிறுமியை ஏமாற்றி கர்ப்பமாக்கி உள்ளார். சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் திருப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல்துறையினர் பாஜகவைச் சேர்ந்த ராஜ் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து ராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் சூரக் கோட்டையை சேர்ந்த ராஜ் (வயது 37) என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக திருப்பூர் மணியகாரம்பாளையம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து தனது மனைவி மற்றும் இரு பெண் குழந்தைகளோடு  வசித்து  வந்துள் ளார்.  பின்னலாடை நிறுவன தையல் ஒப்பந்தகாரராக இவர் பா...வில் பொறுப்பேற்று அப்பகுதியில் பணியாற்றி வந்துள்ளார்.

அதே பகுதியில் வசித்து வந்த கிருஷ்ணவேணி என்பவர் குடும்பத் திற்கும் ராஜூவின் குடும்பத்திற்கும்  பக்கத்து வீட்டுக்காரர்கள் என்கிற முறையில் நட்பு இருந்து வந்துள்ளது.கிருஷ்ணவேணியின் கணவர் இறந்து விட்ட .நிலையில் 12 ஆம் வகுப்பு படிக்கும் தனது 17 வயது மகளுடன்  அவர் வசித்து வந்துள்ளார்."கரோனா" பிரச்சினை காரணமாக பள்ளிகள் விடுமுறை என்பதால் கிருஷ்ண வேணியின் மகள் வீட்டில் இருந்து ள்ளார்.

ராஜூ தான் வேலை பார்க்கும் பின்னலாடை நிறுவனத்திற்கு கிருஷ்ண வேணியின் மகளை அழைத்து செல்வதாக கூறியுள்ளார். பக்கத்து வீட்டுக்காரர்தானே என்று அவரும் நம்பி அனுப்பியுள்ளார். இதை தனக்கு வாய்ப்பாக பயன்படுத்தி கொண்ட ராஜூ கிருஷ்ணவேணியின் மகளை பாலியல் வன்முறைக்கு உள் ளாக்கியுள்ளார். இதனால் கர்ப்பம் அடைந்த அந்த சிறுமி  தனது தாயிடம் நடந்ததை கூறியுள்ளார். இதையடுத்து சிறுமியின் தாயார் கிருஷ்ணவேணி திருப்பூர் தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத் தில் புகார் செய்ததை தொடர்ந்து சிறுமியை சீரழித்த ராஜூ மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து ராஜூ வை கைது செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள் ளனர்.

குற்றம் செய்தவர் பாரதிய ஜனதா கட்சியை சார்ந்தவர் என்பதை முதல்தகவலறிக்கையில் காவல்துறையினர் பதிவு செய்யவில்லை. தன் மகளின் வயதையொத்த சிறுமியை சீரழித்த குற்றவாளியை தப்ப வைக்க  இப்பிரச்சினையில் பல்வேறு கோணங் களில் முயற்சிகள் நடப்பதாக தக வல்கள் வெளியாகியுள்ளன.

Comments