கும்மிடிப்பூண்டி, டிச. 18-- கும் மிடிப்பூண்டி மாவட்டம் சார்பில் பொதுமக்களிடம் மயக்க பிஸ்கட்டுகள் ஓர் எச்சரிக்கை புத்தகம் சென்னை செங்குன்றத்தில் வழங்கப்பட் டது.
மாவட்டத் தலைவர் புழல் த.ஆனந்தன் தலைமையில் ‘மயக்க பிஸ்கட்டுகள் ஓர் எச் சரிக்கை" புத்தகங்கள் கழகப் பொறுப்பாளர்கள் மற்றும் திமுக,விடுதலை சிறுத்தைகள் கட்சி, தாய்த்தமிழர் இயக்கம் போன்ற இயக்கங்களிலிருந்து ஏராளமான தோழர்கள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் வழங்கப்பட்டது.
செங்குன்றம் பகுதியில் பொதுமக்களிடையே சிறப் பான வரவேற்பு இருந்தது, திராவிடர் கழகத்தில் இருந்து வருகிறோம் என்று சொன்ன உடனே அவர்களாகவே தானாக முன்வந்து புத்தகங் களைப் பெற்றுக்கொண்டு மகிழ்ச்சியை தெரிவித்தனர்,
இந்நிகழ்வில் கலந்து கொண்டவர்கள், தொழில் உலகம் பத்திரிகையின் ஆசிரி யரும்,பொதுக்குழு உறுப்பின ரும் ஆன விஜயகுமார், மாவட்ட அமைப்பாளர் கும் மிடிப்பூண்டி பாஸ்கர், புழல் ஒன்றிய செயலாளர் வடகரை உதயகுமார், புழல் ஒன்றிய தலைவர் விஜயகுமார், பொதுக் குழு உறுப்பினர் கஜேந்திரன், மாவட்ட இளைஞரணி தலைவர் சோழவரம் ப.சக்கர வர்த்தி, மாவட்ட இளைஞ ரணி செயலாளர் க.ச.க. இர ணியன், புழல் நகர தலைவர் சோமு, சோழவரம் ஒன்றிய செயலாளர் பெருங்காவூர் சண்முகம், தி.மு.க. பேச்சாளர் செங்குன்றம் ஏ.திராவிடமணி, தி.மு.க. கலை, இலக்கிய பகுத் தறிவு பாசறை மாவட்ட அமைப்பாளர் இலக்கியன், விடுதலை சிறுத்தைகள் கட்சி யின் அரிமாவளவன், தாய்தமி ழர் இயக்கத்தின் ஒருங்கிணைப் பாளர் க.பா.சீனிவாசன், பாலு ஆகியோர் கலந்துகொண்ட னர்.

No comments:
Post a Comment