திருச்சி, டிச. 18- தந்தை பெரியார் நினைவுநாள் கலந் துரையாடல் கூட்டம் 13.12.2020 காலை 11 மணிக்கு திருவரங்கம் பெரியார் படிப்பகத்தில் திருச்சி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் ஞா. ஆரோக் கியராஜ் தலைமையில் நடை பெற்றது.
இக்கூட்டத்தில் சா. கண் ணன் (திருவரங்கம் நகர தலை வர்), இரா. முருகன் (திருவ ரங்கம் நகர செயலாளர்), பி. தேவா (திருச்சி மாவட்ட இளைஞரணி செயலாளர்), த.ஜெயராஜ் (விடுதலை வாச கர் வட்ட தலைவர்), மு. மாதவி, ச.திருநாவுக்கரசு, பொறியாளர் ச. இங்கர்சால் ஆகியோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.
1) அனைத்து தோழர்களு டன் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது.
2) நகர திராவிடர் கழகம் விடுதலை வாசகர் வட்டம் மற்றும் கூட்டணி அரசியல் கட்சிகளுடன் இணைந்து தமிழர் தலைவரால் அறிவிக் கப்பட்ட ' மயக்க பிஸ்கட் ஒரு எச்சரிக்கை' என்னும் புத்த கத்தை நான்காயிரத்திற்கு அதிகமான புத்தகத்தை அய்ம்பதிற்கும் மேற்பட்ட தோழர்களுடன் வீடுதோறும் கொடுத்து பிரச்சாரம் செய் வது என தீர்மானிக்கப்படுகி றது.
3) விடுதலை வாசகர் வட் டம் சார்பில் தந்தை பெரியார் நினைவு நாள் அரங்கக் கூட் டம் நடத்துவது என தீர் மானிக்கப்படுகிறது.
4)தமிழர் தலைவர் ஆசிரி யர் அவர்களின் 88ஆவது பிறந்த நாள் விழாவை தெரு முனை பிரச்சார கூட்ட மாக திருவானைக்காவல் திருவரங் கம் பகுதிகளில் மாவட்ட கழ கம் மற்றும் திருவரங்கம் நகர கழக தோழர்களும் இணைந்து நடத்துவது என இந்த கூட் ட த் தில் தீர்மானிக்கப்படு கிறது.

No comments:
Post a Comment