நாகர்கோவில், டிச. 18- தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்க ளின் 88ஆவது பிறந்த நாள் விழா கூட்ட நிகழ்ச்சி குமரி மாவட்ட மகளிர் அணி சார்பில் நாகர்கோவில் பெரியார் மய்யத் தில் வைத்து நடைபெற்றது.
திராவிடர் கழக மகளிரணி மாநில அமைப்பாளர் சி. கிருஷ்ணேஷ்வரி தலைமை தாங்கினார். மாவட்ட தலை வர் எம். எம். சுப்பிரமணியம், மாவட்ட செயலாளர் கோ. வெற்றி வேந்தன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுக் குழு உறுப்பினர் ம. தயாளன் சிறப்புரையாற்றினார். மாவட்ட மகளிர் பாசறை அமைப்பாளர் கி. அன்பரசி இனிப்புகள் வழங்கினார் .மாவட்ட பக செயலாளர் பெரியார் தாஸ், மாவட்ட துணைத் தலைவர் ச. நல்ல பெருமாள், துணைச் செய லாளர் சோ. பன்னீர்செல்வம், மாவட்ட முன்னாள் தலைவர் ப. முருகபதி, ஆகியோர் கருத் துரை ஆற்றினர். தொழிலா ளர் அணி செயலாளர் ச. ச. கருணாநிதி, இலக்கிய அணி செயலாளர் பொன்னுராசன், இளைஞர் அணி பொறுப்பா ளர்கள் அலெக்சாண்டர், மு. சேகர் ம.மகேஷ், மாநகர துணைத் தலைவர் கவிஞர் ஹ. செய்க் முகமது, அமைப் பாளர் சு.இராஜ கோபால் மாணவர் கழக அமைப்பாளர் த.பிரதீஷ்ராஜா தோழர்கள் பி.கென்னடி, பெரியார் பிஞ்சு அபர்ணா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment