மேனாள் ஆசிரியரும், "ஈரோட்டுப் பூகம்பம்" எனும் தலைப்பில் தந்தை பெரியார், திராவிடர் இயக்கக் கொள்கை களைப் பகுத்தறிவுக் கலை நிகழ்ச்சி மூலம் மக்களைச் சிரிக்க வைத்து சிந்திக்க வைத்தவருமான முரசொலி முகிலன் (வயது 80) இன்று விடியற்காலை மாரடைப்பால் மரணமுற்றார் என்ற தகவல் அறிந்து பெரிதும் வருந்துகிறோம்.
தஞ்சையில் நடைபெற்ற சுயமரியாதை இயக்கப் பொன்விழா மாநாட்டில் (1975) ஆசிரியர் முனியாண்டியுடன் இணைந்து கலை நிகழ்ச்சியைத் தொடங்கியவர், பிறகு ஒரு கலை நிகழ்ச்சிக் குழுவையே சிறப்பாக அமைத்து தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரப் பீரங்கியாக வலம் வந்தவர்.
ஒரு மாதத்துக்கு முன்புகூட தொலைப்பேசி மூலம் அவர் உடல் நலன் குறித்து அவரிடம் விசாரித்ததுண்டு. நலம் பெற்று மீண்டும் தன் பகுத்தறிவுப் பணிகளைத் தொடங்குவார் என்று எதிர்பார்த்த நேரத்தில், இப்படியொரு துயரச் செய்தி! தி.க., தி.மு.க.வுக்கு அமைப்பு ரீதியில் பேரிழப்பாகும். அவர் பிரி வால் துயருறும் அவரது துணைவியாருக்கும், குடும்பத்தின ருக்கும், அருமைச் செல்வங்களுக்கும், தோழர்களுக்கும் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
கழகப் பொதுச் செயலாளர் தஞ்சை இரா. ஜெயக்குமார், திருவாரூர் மாவட்டக் கழகத் தலைவர் வீ. மோகன், நாகை மாவட்டத் தலைவர் வி.எஸ்.டி.ஏ. நெப்போலியன் ஆகியோர் கழகத் தோழர்களுடன் சென்று இறுதி மரியாதை செலுத்துவார்கள்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
14.12.2020

No comments:
Post a Comment