திருப்பூர் மாநகர மக்கள் எதிர்ப்பு
திருப்பூர்,டிசம்பர்.14- கோவில் என்ற பெயரில் அரசு நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள் ளதற்கு திருப்பூர் மாநகர பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து புகார் அளித் துள்ளனர்.
திருப்பூர் மாநகராட்சி 3-ஆவது வார்டு பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில், மாநகராட்சி ஆணையர் க.சிவக் குமாரிடம் அளித்த புகாரில் தெரிவித் திருப்பதாவது;
திருப்பூர் அண்ணாநகர் அன்னையம் பாளையம் சாலை யில் முத்தாலம்மன் கோவில் என்ற பெயரில் முறைகேடாக அரசுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிர மிப்பு செய்து கட்டியுள்ள கட்டடத்தை அகற்ற வேண்டும், அதேபோல் செட்டி பாளையம் தியாகி குமரன் காலனி பகுதியில் பொதுமக்கள் சுடுகாடாக பயன் படுத்தி வருகின்ற புறம்போக்கு நிலத்தில் தனியார் ஒருவர் கோவில் கட்டுவதாகக் கூறி மின் இணைப்பு பெற்றுள்ளார்.
இந்த மின் இணைப்பு சட்டத்துக்கு புறம்பாக நீரோடை புறம்போக்கு நில ஆக்கிரமிப்பு பகுதியில் கொடுக்கப்பட்டுள் ளது.இந்த ஆக்கிரமிப்புகள் மீது உடனடி யாக துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் தெரிவிக்கப்பட் டிருந்தது.
இப்புகார் திருப்பூர் மின் வாரிய மேற்பார்வை பொறியாள ரிடமும் அளிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment