இன்னும் எத்தனை விவசாயிகள் உயிர்த் தியாகம் செய்ய வேண்டும்? : ராகுல் காந்தி கேள்வி! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, December 14, 2020

இன்னும் எத்தனை விவசாயிகள் உயிர்த் தியாகம் செய்ய வேண்டும்? : ராகுல் காந்தி கேள்வி!

 புதுடில்லி,டிச.14,  மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டில்லியில் விவசாயிகள் நடத்தி வருகிற போராட்டம் 17ஆவது நாளை நேற்று முன்தினம் எட்டியது. இந்த போராட்டத்தில் இதுவரை 11 விவசாயிகள் பலியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர் பான பத்திரிகை செய்தியை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் நேற்று இணைத்து ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர், “வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வைப்பதற்காக இன்னும் எத்தனை விவசாயிகள் உயிர்த் தியாகம் செய்ய வேண்டும்?” என கேள்வி எழுப்பி உள்ளார். இதேபோன்று காங்கிரஸ் தலைமை செய்தி தொடர்பாளர் சுர்ஜிவாலா வெளியிட்ட டுவிட்டர் பதிவில், "17 நாட்களில் 11 விவசாய சகோதரர்கள் உயிர்த் தியாகம் செய்துள்ளனர். மோடி அரசு பின் வாங்கவில்லை. அவர்கள் இன்னும் தங்களுக்கு பணம் தருவோ ருடன் உள்ளனரே தவிர உணவு தருவோருடன் நிற்கவில்லை. இதுதான் ராஜ தர்மமா?” என கேட்டுள்ளார்.

No comments:

Post a Comment