குடந்தை கழக மாவட்டம் விடுதலை சந்தா வழங்கல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, December 14, 2020

குடந்தை கழக மாவட்டம் விடுதலை சந்தா வழங்கல்

குடந்தை கழக மாவட்டம் மூன்றாவது தவணையாக 30 விடுதலை சந்தா தொகை ரூ.39,050/-அய் கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினர். குடந்தை கழக மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் தமிழர் தலைவர் ஆசிரியரின் 88-ஆம் ஆண்டு பிறந்தநாள் பரிசாக 188 விடுதலை சந்தாக்களை வழங்கும் இலக்காக கொண்டு முதல் இரண்டு தவணையில் 132 விடுதலை சந்தாக்களை வழங்கினர். மூன்றாவது தவணையாக 11-12-2020 அன்று இரவு உழவன் விரைவு வண்டி மூலமாக சென்னை வரும் வழியில் குடத்தை ரயில்நிலையத்தில் கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் கு.நிம்மதி, குடந்தை நகர செயலாளர் வழக்குரைஞர் ரமேஷ், திருவிடைமருதூர் தெற்கு ஒன்றிய செயலாளர் சங்கர், திருநாகேஸ்வரம் நகர செயலாளர் திராவிட பாலு, திருநாகேஸ்வரம் சிவக்குமார் ஆகியோர் 17 ஆண்டு சந்தாக்கள் 13 அரையாண்டு என மொத்தம் 30 விடுதலை சந்தாக்கள் 1 உண்மை சந்தாக்களுக்கான தொகை ரூ.39,650/-அய் வழங்கினர்.

No comments:

Post a Comment