மேலையூரில் எழுச்சியுடன் நடைபெற்ற சுயமரியாதை நாள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, December 14, 2020

மேலையூரில் எழுச்சியுடன் நடைபெற்ற சுயமரியாதை நாள்

 தமிழர் தலைவர் பிறந்த நாள் விழா - மரக்கன்றுகள் அளிப்பு விழா 

மேலையூர், டிச. 14- ஒக்கநாடு மேலை யூரில் 2.12.2020 அன்று மாலை திரா விடர் கழகத் தலைவர் தமிழர் தலை வர் தந்தை பெரியாரின் கருவூலம் விடுதலை ஆசிரியர் அவர்களின் 88ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பழ மரக்கன்று வழங்கும் விழா நடைபெற்றது.

தஞ்சை மாவட்ட செயலாளர் .அருணகிரி தலைமையில் கழகப் பொதுச்செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் மரக்கன்று வழங்கும் விழாவை தொடங்கி வைத்தார், நிகழ் விற்கு ஒக்கநாடு மேலையூர் ஊராட்சி மன்றத் தலைவர் சித்ரா, இரவிச்சந் திரன் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சமயன்குடிகாடு அன்பரசு, தி.மு.. மாவட்ட மருத்துவர் அணி  அமைப்பாளர் மருத்துவர் அஞ்சுகம் பூபதி, மாநில திராவிடர் கழக இளை ஞரணி துணைச் செயலாளர் இரா.வெற்றிக்குமார், ..மு.. மாவட்ட மகளிரணி செயலாளர் கவிதா தமிழ ரசன்,  ஒக்கநாடு மேலையூர் திமுக கிளைச் செயலாளர் ராஜரத்தினம்,  ஒக்கநாடு மேலையூர், ..மு.. ஊராட்சி செயலாளர் மா.ராஜகோ பால் ..மு.. மாவட்ட தொழில் நுட்ப பிரிவு துணைச் செயலாளர் குலமங்கலம் கே.எம்.பாலாஜி, ஒரத்த நாடு ஒன்றிய .மு.மு.. வர்த்தக அணி செயலாளர் மருது ஜுவல்லரி மந்திரிகுமார், மழவராயர் தெரு திமுக கிளைச் செயலாளர் தேடல் அமைப்பின் சமுதாய சிந்தனையாளர் சு.சி.நீதிவான், சுகன்யா மெடிக்கல் சென்டர் உரிமையாளர் பொதுநலத் தொண்டர் .பிரபு, மழவராயர் தெரு ஊராட்சி மன்ற உறுப்பினர் .அன் பழகன், மழவராயர் தெரு கிராம தெரு பஞ்சாயத்துகள் வெ.இராஜேந் திரன், கலியபெருமாள், தமிழ்மணி, அல்லிமுத்து, மா.கணேசன், பெரியார் நகர் தஞ்சை தங்க.துரைராஜ், மழவரா யர் தெரு வை.பிச்சை, இராஜகோபால், பா.முத்துசாமி, மழவராயர் தெரு முருகன், திராவிடர் கழக கிளை செய லாளர் சு.சி.இளையராஜா உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் நண்பர் கள் பங்கேற்று தமிழர் தலைவர் பிறந்த நாள் மகிழ்வாக மரக்கன்று களை பெற்றுக்கொண்டு மகிழ்ந்தனர்.

தமிழர் தலைவர் பிறந்த நாள் மகிழ்வாக 100 மரக்கன்றுகளை . பிச்சை, .கோவிந்தராஜ் நினைவாக ஒரத்தநாடு கண்ணந்தங்குடி மேலை யூர் ரமேஷ் சுதா வழங்கினார்.

நிகழ்வை பெரியார் நகர், . உத் திராபதி தொகுத்து வழங்கினார்.

மாவட்ட ஒன்றிய கிளைக் கழகம் சார்பில் மற்றும் அனைத்து கட்சி நண்பர்கள் ஊர் பொதுமக்கள் அனை வருக்கும் விழாக்குழுவின் சார்பிலும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment