டிச. 2: சுயமரியாதை நாள்: தருமபுரியில் தமிழர் தலைவர் பிறந்தநாள் விழா! புத்தக வெளியீடு, குருதிக்கொடை, கருத்தரங்கம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, December 14, 2020

டிச. 2: சுயமரியாதை நாள்: தருமபுரியில் தமிழர் தலைவர் பிறந்தநாள் விழா! புத்தக வெளியீடு, குருதிக்கொடை, கருத்தரங்கம்!

தருமபுரி, டிச. 14- திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர், ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் 88 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு தர்மபுரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் புத்தக வெளி யீடு, குருதிக்கொடை, கருத்தரங்கம் நிகழ்ச்சிகள் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

தமிழர் தலைவர் வாழ்க, பெண்ணடிமை ஒழிப்பு தந்தை பெரியார் வாழ்க, பெண்ணுரிமை காப்பாளர் தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி வாழ்க, ஜாதி மத மூடநம்பிக்கையை அழித்தொழிக்கும் ஆசிரியர் வாழ்க, என தோழர்கள் முழக்கமிட தருமபுரி மண்டல கழக தலைவர் தமிழ்ச்செல்வன் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார்.

பெரியார் பெருந்தொண்டர் கழகப் புரவலர் கே.ஆர். சின்னராசு, மாவட்டத் தலைவர் வீ.சிவாஜி ஆகியோர் தோழர்களுக்கும் பொதுமக்களுக்கும் இனிப்பு வழங்கினர்.                                                      

புத்தக வெளியீடு

தமிழர் தலைவர் ஆசிரியர்  கி .வீரமணி  அவர்கள் எழுதிய ஒப்பற்ற தலைமை, வாழ்வியல் சிந்தனைகள் (பாகம்15) மற்றும் மார்க்சிய சிந்தனை எழுத்தாளர் அருணன் அவர்கள் எழுதிய ஒரு மார்க்சிஸ்ட் பார்வையில் திராவிடர் கழகம் என்கின்ற மூன்று நூல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது.

புத்தக வெளியீட்டு விழா நிகழ்வுக்கு மாவட்டத் தலைவர் வீ. சிவாஜி தலைமை ஏற்றார். மாவட்ட செயலாளர்  .மாதன் வரவேற்புரையாற்றினார். பொதுக்குழு உறுப்பினர்கள் கா.கதிர், இரா.வேட் ராயன்,   மாவட்ட வழக்குரைஞர் அணி அமைப்பா ளர் பீம.தமிழ் பிரபாகரன், நகரத் தலைவர் கரு.பாலன்,நகர செயலாளர் எல்.அய்.சி பரமசிவம், மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணைத்தலைவர் கே.ஆர். குமார், மாவட்ட பகுத்தறிவு ஆசிரியர் அணி தலைவர் அண்ணாதுரை, மாவட்ட பகுத் தறிவு ஆசிரியர் அமைப்பாளர் இரா.கிருஷ்ண மூர்த்தி, மாவட்ட இளைஞரணி தலைவர் தீ.எங்கல்ஸ், மண்டல மாணவர் கழகச் செயலாளர் மா.செல்லதுரை,  மாவட்ட இளைஞரணி அமைப் பாளர் அர்ஜுனன், மகளிர் பாசறை அமைப்பாளர் கவிதா, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மூன்று புத்தகங்களையும் பெரியார் பெருந் தொண்டர் கே.ஆர்.சின்னராஜ் வெளியிட தருமபுரி  மாவட்ட தி.மு.. செயலாளரும் தருமபுரி சட்ட மன்ற உறுப்பினருமான தடங்கம் பெ.சுப்பிரமணி, திராவிடர் கழக மாநில அமைப்புச் செயலாளர் ஊமை.ஜெயராமன், தி.மு.. நகர செயலாளர் மேச்சேரி அன்பழகன், காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் கோ.வி.சிற்றரசு, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க பொறுப்பாளர்  நாகை. பாலு, பெரியார் பற்றாளர் முனி.ஆறுமுகம் மற்றும் கழக நிர்வாகிகள், தோழர்கள் பெற்றுக் கொண்டனர். அனைவருக்கும் கைத்தறி ஆடை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது.

குருதிக்கொடை

தமிழர் தலைவர் பிறந்த நாளை முன்னிட்டு திராவிடர் மாணவர் கழகம் சார்பில் குருதிக்கொடை முகாம் பெரியார் மன்றத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மண்டல திராவிடர் மாணவர் கழக செயலாளர் மா.செல்லதுரை தலைமையில் மாநில திராவிட மாணவர் கழக துணைச் செயலாளர் .மு.யாழ்திலீபன், மாவட்ட இளைஞரணி தலை வர் தீ.ஏங்கல்ஸ் முன்னிலையில் நடைபெற்றது. குருதிக்கொடை முகாமை திராவிடர் கழக மாநில அமைப்புச் செயலாளர் ஊமை.ஜெயராமன் பெரியார் பெருந்தொண்டர் கே.ஆர்.சின்னராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். குருதிக்கொடை வழங்கிய தோழர்கள்; மா.செல்லதுரை, இரா. கிருஷ்ணமூர்த்தி, .யாழ்திலீபன், சி.காமராஜ்,  கிருஷ்ணன், கரன், தனலட்சுமி, வேப்பிலைப்பட்டி .சமரசம், .பெரியார், வி.பா.அறிவுக்கரசு, கொண் டகரஅள்ளி தோழர்கள் ஆனந்தன் பிரகாசம், சோபாசுரேஷ், கோ.தனசேகரன், சுரேஷ் ஆகிய 15 பேர் குருதிக்கொடை வழங்கினர். குருதிக்கொடை வழங்கியோருக்கு மாவட்டத் தலைவர் வீ.சிவாஜி பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார்.

கருத்தரங்கம்

தமிழர் தலைவர்  88 வயதின் பயணத்தில் என் னும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. கருத் தரங்கத்தை மண்டலத் தலைவர் .தமிழ்ச்செல்வன் தொடங்கி வைத்து பேசினார்.

Ôஜாதி ஒழிப்புக் களத்தில் ஆசிரியர்Õ என்னும் தலைப்பில் பொதுக்குழு உறுப்பினர் இரா.வேட் ராயன், Ôமூட நம்பிக்கை ஒழிப்பில் ஆசிரியர்Õ என் னும் தலைப்பில் .மு... பொறுப்பாளர் நாகை பாலு, Ôகலைஞரின் உற்ற துணை-ஆசிரியர்Õ என்னும் தலைப்பில் மாவட்ட அமைப்பாளர் பெ.கோவிந்த ராஜ், Ôசமூகநீதி களத்தில் ஆசிரியர்Õ என்னும் தலைப் பில் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் மாரி.கருணாநிதி, Ôபோராட்டக்களத்தில் ஆசிரியர்Õ என்னும் தலைப்பில் மாநில திராவிடர் மாணவர் கழக துணைச் செயலாளர்  .யாழ்திலீபன், விடு தலைக் களத்தில் ஆசிரியர் என்னும் தலைப்பில் மாவட்ட பகுத்தறிவு ஆசிரியர் அணி அமைப்பாளர் கதிர். செந்தில்குமார், Ôபெண்ணுரிமை களத்தில் ஆசிரியர்Õ என்னும் தலைப்பில்  விடுதலை வாசகர் வட்ட செயலாளர் .சுதாமணி ஆகியோர் உரை யாற்றினர்.

பங்கேற்றோர்

மேனாள் மாவட்ட செயலாளர் சி.காமராஜ், ஒன்றிய தலைவர் .துரைசாமி, விடுதலை  வாசகர் வட்டத் தலைவர் .சின்னராஜ்,வாசகர் வட்ட அமைப்பாளர் மல்லிகா, பாப்பாரப்பட்டி ஆசிரி யர் சுந்தரம், மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் துணைத் தலைவர் தீ.சிவாஜி, கடத்தூர் விடுதலை வாசகர் வட்ட தலைவர் கோ.தனசேகரன், கடத்தூர் வாசகர் வட்ட செயலாளர் தாளநத்தம் .நடராஜ், திமுக செயலாளர் சோ.பாண்டியன், காமலாபுரம் எல்.அய்.சி. கிருஷ்ணன், மாணவர் கழக அமைப் பாளர் வீ.முகிலன், மாணவர் கழகம் வி.பா.அறி வுக்கரசு, மாரவாடி கா.காரல்மார்க்ஸ்,  புழுதிகரை சோபாதசரதன்,  மாதேஸ்வரன், சண்முகம், .மணிவேல், கொண்டகரஅள்ளி கிளைக்கழகத் தலைவர் ஆனந்தன், அமைப்பாளர் பிரகாசம், வேப்பிலைப்பட்டி .சமரசம், .பெரியார் ஆகி யோர் கலந்து கொண்டனர். இறுதியாக மாவட்ட பகுத்தறிவு ஆசிரியர் அணி அமைப்பாளர் இர.கிருட்டினமூர்த்தி நன்றி கூறினார். வருகை தந்த அனைவருக்கும் சிறப்பு விருந்து அளிக்கப்பட்டது.

No comments:

Post a Comment