திராவிடத்தின் மீது பொய்ப் பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விடும் இந்துத்வா வெறியர்களை விரட்டியடிக்க "மயக்க பிஸ்கட்கள் - ஒர் எச்சரிக்கை" புத்தகத்தை அய்ஸ்அவுஸ் நீலம்பஷா தர்க்கா பகுதியில் உள்ள வீடுகளில் தோழர் அப்துல்லா வழங்கினார்.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பிறந்த நாள் விழாவில் தொடங்கப்பட்ட "மயக்க பிஸ்கெட்டுகள் - ஓர் எச்சரிக்கை" புத்தகம் வழங்கும் இயக்கம் தமிழகமெங்கும் கழகப் பொறுப்பாளர்களால் முன்னெடுக்கப்பட்டு எழுச்சியுடன் நடைபெற்று வருகிறது. கடலூர் மாவட்டம் வடக்குத்து கிராமத்தில் பொதுமக்களிடம் வழங்கி பரப்புரை யில் கழகப் பொறுப்பாளர்கள் ஈடுபட்டனர். மாவட்ட அமைப்பாளர் மணிவேல் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் வடக்குத்து திராவிடர் கழகம் சார்பில் "மயக்க பிஸ்கெட்டுகள்-ஓர் எச்சரிக்கை" புத்தகங்களை பொது மக்களிடம் வழங்கினர்.
வடசென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பாக மங்களபுரம் பகுதியில் "மயக்க பிஸ்கெட்டுகள்: ஓர் எச்சரிக்கை!" புத்தகம் வீடு களிலும், கடைகளிலும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. கழக துணைப் பொதுச்செயலாளர் ச.இன்பக்கனி துவக்கி வைத்தார். சென்னை மண்டல செயலாளர் தி.சே.கோபால், தி.செ.கணேசன், இராமலிங்கம், ஓட்டேரி பாஸ்கர், பா.நதியா, டில்லிபாபு, புரசை அன்புச் செல்வன், மரகதமணி, கோபாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.



No comments:
Post a Comment