சென்னை, டிச. 14- இந்திய கம் யூனிஸ்ட் கட்சியின் தமிழ் நாடு மாநில நிர்வாகக் குழு மற்றும் மாநிலக் குழுக் கூட் டங்கள் திருப்பூர் அருகில் உள்ள செங்கப்பள்ளியில் நாளை (15/12/2020) தொடங்கி 3 நாட்கள் நடைபெறுகிறது.
இதுகுறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது:
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் தமிழ்நாடு மாநில நிர்வா கக் குழுக் கூட்டம் திருப்பூரில் டிச.15, 16 தேதிகளிலும் டிச.17 ஆம் தேதி மாநிலக் குழுக் கூட்டமும் நடைபெறுகிறது.
இக்கூட்டத்தில் கட்சியின் மூத்த தலைவர்கள் இரா.நல்லகண்ணு, தா.பாண்டியன், மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், துணைச் செய லாளர்கள் கே.சுப்பராயன் எம்.பி., மு.வீரபாண்டியன், தேசிய நிர்வாகக் குழு உறுப் பினர் சி.மகேந்திரன், நாகை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.செல்வராசு, மாநிலப் பொருளாளர் எம். ஆறுமுகம் உட்பட மாநில நிர்வாகக்குழு உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள். மாநிலக் கட் டுப்பாட்டுக் குழு உறுப்பி னர்கள், மாநிலக் குழு உறுப் பினர்கள் மற்றும் அழைப் பாளர்கள் கலந்து கொள்கின் றனர்.
தற்போது நடைபெற்று வரும் விவசாயிகள் போராட் டம், மத்திய, மாநில அரசுக ளின் நடவடிக்கைகள், கரோனா நோய் தொற்று பரவலால் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள், சிறு குறு, நடுத்தரத் தொழில் கள் சந்திக்கும் பிரச்சினைகள், வருகிற சட்டப் பேரவைத் தேர்தல் தயாரிப்புப் பணிகள் உட்பட முன்னுரிமை பெறும் மக்கள் பிரச்சினைகள் தொடர் பாக விவாதித்து முடிவுகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அதில் முத்தர சன் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment