செய்தியும், சிந்தனையும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, December 14, 2020

செய்தியும், சிந்தனையும்....!

கல்லா கட்டும் வேலை

சிறீரங்கத்தில் சொர்க்க வாசல் திறப்பு - பக்தர்களுக்கு அனுமதியில்லை.

பக்தர்களுக்கு அனுமதியில்லாத போது - சொர்க்க வாசல் யாருக்காகத் திறக்கப்படுகிறதாம்?

எதையாவது சொல்லி பார்ப்பனப் புரோகிதர்கள் கல்லா கட்டவேண்டும், அப்படித்தானே!

எழுதி வைத்துக் கொள்ளலாம்

டில்லியில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவாக அமெரிக்காவிலும் சீக்கியர்கள் போராட்டம்.

மத்திய அரசின் வறட்டுக் கவுரவமும், கார்ப்பரேட்டுகளின் மீது கண் மூடித்தனமான காதலும் மத்திய பி.ஜே.பி. அரசை வெகுஜன அதிருப்திக்கான கட்சி என்ற நிலையைத்தான் ஏற்படுத்தும் - எழுதி வைத்துக் கொள்ளலாம்.

காலத்தின் குறி!

தி.மு.. தலைவர் தளபதி மு..ஸ்டாலின் 1.11.2020 முதல் மாவட்டம் தோறும் நடத்தும் ‘‘தமிழகம் மீட்போம்!'' என்ற காணொலி மூலமான உரையில் இதுவரை ஒரு கோடி மக்கள் பங்கு பெற்று பயன்பெற்றுள்ளனர்.

மக்களின் ஆதரவுக் காற்று யார் பக்கம் வீசுகிறது என்பதற்கான அடையாளமாக இதனைக் கருதவேண்டும். அடுத்த கட்ட காணொலி மூலமான உரையில் இன்னும் கோடிக்கணக்கான வாக்காளப் பெருமக்கள் இணைவர் என்பதில் அய்யமில்லை.

கடவுளை வணங்குபவர்...?

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகில் தாண்டிக்குடி முத்தாலம்மன் கோவில் திருவிழாவில் பக்தர்களும் உடலில் சேற்றை வாரிப் பூசிக் கொண்டு நேர்த்திக் கடனைச் செலுத்தினர்.

பக்தி மக்களின் அறிவைச் சகதியாக்குகிறது என்பதற்கு இதைவிட என்ன சான்று தேவை?

ஏமாறாதே - ஏமாற்றாதே!

கரோனா தொற்று 98.5 லட்சமாகிவிட்டது. மேலும் 30 ஆயிரம் பேருக்குத் தொற்று.

கரோனா  பாதிப்பு குறைந்துவிட்டது - குறைந்துவிட்டது என்று கூறி தம்பட்டம் அடித்துக் கொண்டு நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டு அலட்சியமாக இருக்கக் கூடாது - எச்சரிக்கை! எச்சரிக்கை!!

சகஜமோ சகஜம்!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரசாதம் வழங்காததால் பக்தர்கள் கடும் வாக்குவாதம் - பறக்கும் படை வந்தது - திருப்பதி மலையில் ஒரே பரபரப்பு!

வியாபாரத்தில்  இதெல்லாம் சகஜமப்பா!.

அபவாதம் பேசலாமா?

இந்துக்கள் ஒருங்கிணைவதை மு..ஸ்டாலினால் தாங்கிக் கொள்ள முடியவில்லை: - எல்.முருகன், தமிழக பா... தலைவர்

அப்படியா....?

இந்துக்கள் ஒன்றாகத்தான் இருக்கிறார்களா?

பிறவியிலேயே ஜாதியைத் திணித்து இந்துக்களை ஒன்றாகாதபடி பார்த்துக் கொண்டு, இப்படி அபவாதம் பேசலாமா?

திருவாளர் முருகன் இந்துக்களின் பீடமான சங்கர மடம் சென்று ஆசீர்வாதம் வாங்க முடியுமா?

பக்கத்தில் நாற்காலி போட்டுதான் உட்கார முடியுமா?

பார்ப்போம்!

No comments:

Post a Comment