சண்டிகர், டிச.14 அரியானாவில் துஷ்யந்த் சவுதாலா தலைமையிலான ஜனநாயக ஜனதா கட்சியின் ஆதரவுடன் மனோகர் கட்டார் தலைமையிலான பாஜக அரசு உள்ளது. விவசா யிகள் கோரிக்கைகளை ஏற்காவிட்டால் பதவி விலகுவதாக பாஜக கூட்டணி அரசின் அரியானா துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை (எம்.எஸ்பி) உறுதி செய்யப்படாவிட்டால் தனது பதவியிலிருந்து விலகுவதாக மத்திய பா.ஜ.க. அரசுக்கு அவர் எச்சரித்துள்ளார்.
புதிய வேளாண் சட்டங்கள் தொடர்பான விவகாரத்தில், விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றாவிட்டால், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியி லிருந்து வெளியேறுவோம் என்று ஏற்கெனவே துஷ்யந்த் சவுதாலா அறிவித்திருந்தார்.
தற்போது துணை முதல்வர் பதவி விலகுவேன் என்று அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளார். 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற்றே ஆக வேண்டும் என்று போராடும் விவசாயிகளில், அரியானாவின் ஜாட் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். அரியானாவில் இவர்களின் ஆதரவுடன்தான் துஷ்யந்த் சவுதாலா 10 இடங்களை வென்றார். தற்போது துணைமுதல்வராகவும் இருக்கிறார். பா.ஜ.க.-வை நோக்கி, பதவி விலகல் எச்சரிக்கை விடுத்துள்ளதைத் தொடர்ந்து அரியானாவில் பாஜக ஆட்சி கலையும் சூழலும் ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment