திராவிடர் கழகத் தோழர்களே,
செயல்வீரர்களே, வீராங்கனைகளே,
1. ‘மயக்க பிஸ்கெட்டு'கள் ஓர் எச்சரிக்கை! வெளியீட்டைப் பரப்பச் செல்லும்பொழுது கட்டாயம் உள்ளூர் தோழர்கள் அணியாகவே அது அமைவதும், மற்ற இயக்க ஆர்வலர்களும் அதில் பங்கேற்கலாம்.
‘அகழ்வாரைத் தாங்கும் நிலம்'போல இப்பிரச்சாரப் பணி அடக்கமுடன், ஆத்திரம் மூட்டப்பட்டாலும் அமைதியை இழக்காது நமது உண்மை லட்சியங்கள் வெல்லும் சொல்லாக அமையவேண்டும்.
முக்கியம்! முக்கியம்!!
2. ‘திராவிடம் வெல்லும்' என்ற இரு சொல் இலட்சிய நோக்கை, எங்கும் பரப்பிடத் தொடங்கிவிட்டீர்களா?
சுவர் எழுத்து, சமூக வலைதளங்களில் எங்கெங்கு காணினும் இது பரவவேண்டும்.
3. மாணவர் கழகம், இளைஞரணி, மகளிரணி, மகளிர்ப் பாசறை, தொழிலாளரணி, மருத்துவரணி, விவசாய அணி முதலிய பலரும் பம்பரமாய்ச் சுழன்று பணியாற்றி பரப்புரை செய்யுங்கள்!
4. அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களது நினைவு நாளாம் டிசம்பர் 24 -க்குள் இது தமிழ்நாடு தழுவிய முழக்கப் பரப்புரையாகட்டும்!
5. ஸ்டிக்கர்கள், டி-சர்ட்டுகள் முதலிய பலவற்றிலும் ‘‘திராவிடம் வெல்லும்!'' வாசகம் இருக்கட்டும் - இவ்வாசகம் அடங்கிய முகக்கவசத்தை வாங்கி அணிந்து கொள்ளுங்கள்.
6. டிசம்பர் 24 - நாடெங்கும் அமைதி ஊர்வலம் அய்யா படத்துடன்; அய்யா படம், உரை பரப்பலை தவறாது மிக எழுச்சியுடன் ஏற்பாடு செய்யுங்கள்!
தலைவர், திராவிடர் கழகம்

No comments:
Post a Comment