திராவிடர் கழக தலைமைச் செயற்குழுக் கூட்டம் சென்னை பெரியார் திடலில் நேற்று (12.12.2020) முற்பகல் 10.30 மணியளவில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. அனைவரையும் வர வேற்றும், கூட்டத்தின் நோக்கம் குறித் தும் திராவிடர் கழகத் துணைத் தலை வர் கலி. பூங்குன்றன் உரையாற்றினார்.
தொடக்கத்தில்
கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் கடவுள் மறுப்புக் கூறினார். இரங்கல் தீர்மானத்தை திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் முன்மொழிய அனைவரும் இரு மணித் துளிகள் எழுந்து நின்று அமைதி காத்து இரங்கலை வெளிப்படுத்தினர்.
தீர்மானங்களை
கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் முன்மொழிந்தார். 17 தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற் றப்பட்டன. கழகப் பொருளாளர் வீ. குமரேசன், வெளியுறவு செயலாளர் கோ. கருணாநிதி, பொதுச்
செயலாளர் வீ. அன்புராஜ், பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி, பொதுச் செயலாளர் தஞ்சை இரா. ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா. குணசேகரன், காணொலி மூலம் கழக செயலவைத் தலைவர் சு. அறிவுக்கரசு, வட சென்னை மாவட்டத்
திராவிடர் கழகத் தலைவர் வழக்குரைஞர் சு. குமாரதேவன், மாநில மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, கழகத் துணைப் பொதுச் செயலாளர் பொறியாளர் ச. இன்பக்கனி, விழுப்
புரம் மண்டல திராவிடர் கழகத் தலைவர் திண்டிவனம் க.மு. தாஸ்,
அமைப்புச் செயலாளர் ஊமை. செயராமன், பகுத்தறிவாளர் கழக மாநிலப் பொதுச் செயலாளர் தமிழ்ச் செல்வன், மாநில மகளிர்ப் பாசறை செயலாளர் வழக்குரைஞர் பா. மணியம்மை, புதுக் கோட்டை மண்டலக் கழகத் தலைவர் பெ. இராவணன், மாநில இளைஞரணி செயலாளர் இளந்திரையன், மாநில மாணவர் கழக அமைப்பாளர் செந்தூர் பாண்டியன், மாநில மாணவர் கழகச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் முதலியோர்
கருத்துரை வழங்கினர்.
சென்னை
மண்டலக் கழக செயலாளர் தே.செ. கோபால்
நன்றி கூறிட பிற்பகல் 3 மணிக்கு தலைமைச் செயற்குழு நிறைவுற்றது.
No comments:
Post a Comment