டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
· விவசாயிகளின் போராட்டத்திற்கு தடை விதிக்க முடியாது. அவர்களுக்குப் போராட உரிமை உள்ளது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
· டில்லி சட்டமன்றத்தில் மோடி அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்தை ஆளும் கட்சியான ஆம் ஆத்மி நிறைவேற்றியது. அச்சட்டங்களின் நகல்களை முதல்வர் கேஜ்ரிவால் கிழித்தெறிந்தார்.
· ஆந்திராவில் பிற்படுத்தப்பட்டோருக்காக 56 கழகங்களை உருவாக்கி அதன் தலைவர்களாகவும், இயக்குனர்களாகவும் 139 ஜாதிப்பிரிவுகளைச் சேர்ந்த 738 பிற்படுத்தப்பட்டோர் பொறுப்பில் அமர்த்தப்பட்டனர். இதில் பெண்கள் 50 சதவீதம் நியமிக்கப்பட்டனர். இதற்கான விழாவில் பேசிய ஆந்திர மா நில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, பிற்படுத்தப்பட்டோர் சமூகத்தின் முதுகெலும்புகள் என கூறினார்.
· மேற்கு வங்க மாநில காவல்துறை அதிகாரிகள் மூன்று பேரை மத்திய அரசுக்கு மாற்றல் செய்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதனை ஏற்க முடியாது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
· டில்லி பல்கலைக்கழக மூன்றாண்டு பட்டப்படிப்பை நான்காண்டுகளாக மாற்றிட தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்திட அமைக்கப்பட்ட குழு பரிந்துரைத்துள்ளது. முன்னர் 2014இல் அப்பல்கலைக்கழகத்தில் நான்காண்டு பட்டப்படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டு, கடும் எதிர்ப்புக்கிடையில், கைவிடப்பட்டது.
· டில்லி அருகே போராடும் விவசாயிகளுக்கு அன்றாடம் செய்திகளை தெரிந்து கொள்ள ‘டிராலி டைம்ஸ்’ எனும் பத்திரிக்கை ஹிந்தி, பஞ்சாபி மொழியில் அச்சடித்து வழங்கப்பட்டு வருகிறது.
தி டெலிகிராப்:
· அநியாய சட்டங்கள் கடும் எதிர்ப்புகளை எதிர்கொள்ளும்.வியட்நாம் போருக்கு எதிராக, பாரிஸில் அமெரிக்காவில் என்ன நடந்தது என்பதை நினைவில் கொள்ளுங்கள் என்று ப.சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் விவசாயிகளின் போராட்டம் குறித்த வழக்கில் வாதாடும்போது கூறினார்.
பி.பி.சி. தமிழ்:
· தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட் டத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு மே 22-ம் தேதி நடந்த துப்பாக் கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக தமிழக அரசு விசாரனை ஆணையம் ஒன்றை அமைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை தொடர்பாக நடிகர் ரஜினிகாந்துக்கு சம்மன் அனுப் பப்படும் என ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. துப்பாக்கி சூட்டின்போது தூத்துக்குடி வந்த நடிகர் ரஜினிகாந்த, போராட் டத்தில் வன்முறை ஏற்பட்டதற்கு சமூக விரோதிகளே காரணம் என்று அங்கு பேட்டி அளித்திருந்தார் என்பது நினைவு கூரத்தக்கது.
குடந்தை கருணா
18.12.2020
No comments:
Post a Comment