நாகை, டிச. 18- விவசாயிகள் விரோத மூன்று அவசர சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் டில்லியில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் நாகப்பட்டினம் அவுரி திடலில் நடைபெற்ற தொடர் காத்திருப்பு போராட் டத்தில் திராவிடர் கழகப் பொறுப்பாளர்கள் பங்கேற் றனர்.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிவுறுத்தலின் படி கலந்துகொண்டு போராட் டம் வெற்றிபெற வாழ்த்து களையும் ஆதரவையும் நாகை மாவட்ட திராவிடர் கழகத் தின் சார்பில் நாகை மாவட்ட செயலாளர் புபேஸ்குப்தா உரையாற்றினார்.
நாகை மாவட்டத் தலை வர் வி.எஸ்.டி.ஏ.நெப்போலி யன், நாகை மாவட்ட தொழி லாளர் அணி அமைப்பாளர் இராச.முருகையன், நாகை நகர செயலாளர் தெ.செந் தில்குமார், மாநில மாணவர் கழக துணை செயலாளர் நா.பொன்முடி, மண்டல இளைஞரணி செயலாளர் சு.ராஜ்மோகன், மாவட்ட மாணவர் கழக செயலாளர் மு.குட்டிமணி, நாகை ஒன்றிய தலைவர் பெ.செல்வராசு, நாகை நகர அமைப்பாளர் நைனாமுகமது, மாணவர் கழ கப் பொறுப்பாளர் மு.இள மாறன், ம.இளமாறன் ஆகி யோர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment