டிசம்பர் 2 - தமிழர் தலைவர் ஆசிரியர் 88ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவில் மாணவர்கள் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது


உரத்தநாடு வடசேரியில் திராவிட மாணவர்கள் சந்திப்பு கூட்டம் 24.11.2020 மதியம் 2 மணி அளவில் தஞ்சை மாவட்ட துணைச் செயலாளர் வடசேரி தி.வ.ஞானசிகாமணி இல்லத்தில் வடசென்னை மாணவர் கழகச் செயலாளர் வடசேரி இரா.பாலாஜி தலைமையில் நடைபெற்றது. சந்திப்புக் கூட்டத்தில் மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், ஒன்றிய தலைவர் த. ஜெகநாதன், மாவட்ட துணைச் செயலாளர் தி.வ.ஞானசிகாமணி, மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூரபாண்டியன், தஞ்சை மாநகர மாணவர் கழக அமைப்பாளர் மானவீரன் ஆகியோர் மாணவ நண்பர்களிடம் கருத்துக்களை கூறினார்கள். கூட்டத்தில் உரத்தநாட்டில் நடைபெற இருக்கும் டிசம்பர் 2 - தமிழர் தலைவர் ஆசிரியர் 88ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவில் வடசேரி பகுதியில் இருந்து மாணவர்கள் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது.


Comments