நூல் அறிமுகம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 31, 2020

நூல் அறிமுகம்


நூல் அறிமுகம்: மருத்துவக் கல்வியில் அகில இந்திய ஒதுக்கீடு வளர்ச்சிக்குத் தண்டமா?


ஆசிரியர்: முனைவர் நீதியரசர்  ஏ .கே .ராஜன்


வெளியீடு : பாரதி புத்தகாலயம், 7, இளங்கோ சாலை, 


தேனாம்பேட்டை,  சென்னை-18


விலை: ரூ 65/- பக்கங்கள்: 64


சமூகநீதிக்களத்தில் தொடர்ந்து தம் கருத்தைத் தெரிவித்து வரும் சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி முனைவர் ஏ .கே .ராஜன் அவர்களால் எழுதப்பட்டுள்ள நூல்.


மருத்துவக் கல்வியில் அனைத்து இந்திய ஒதுக்கீட்டிற்காக ஒதுக்கப்பட்ட இடங்கள்  குறித்து இந்த நூல் எழுதப்பட்டுள்ளது.


அகில இந்திய கோட்டா ஏற்பட்டதற்கான சட்டரீதியான காரணங்களையும், அதை செயல்படுத்தும் போது தொடர்ந்து செய்யப்பட்ட வரும் தவறுகளையும் நியாயமற்ற தன்மைகளையும் தெளிவாக விளக்குகிறது இந்த நூல்.


மேலும் அகில இந்திய கோட்டா தொடர்பான ஏராளமான வழக்குகள் தீர்ப்புகள் ஆகியவற்றைக் கொண்டு இந்த நூலை ஒரு ஆய்வு நூலாக எழுதியுள்ளார்.


அகில இந்திய கோட்டாவில் பின்பற்றப்படும் இட ஒதுக்கீட்டு முறைகளையும் சமூக நீதியையும் குறித்த வழக்குகள் தீர்ப்புகள் ஆகியவற்றை தெளிவுபடுத்துகிறது இந்த நூல். முன்னுரையிலேயே தமிழக மருத்துவக் கல்லூரிகளில் தோற்றம் மருத்துவக் கல்வி வளர்ச்சிமருத்துவக் கல்வியில் சமூக நீதியின் நிலை ஆகியவற்றை தெளிவாக விளக்குகிறது இந்த நூல்.


மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் அகில இந்திய ஒதுக்கீடு, இந்திய நிலப்பகுதியில் பன்முக குடியிருப்பு , மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கை தொடர்பாக  உச்சநீதிமன்றத்தில் வந்த வழக்குகள்  உள்ளிட்ட ஏராளமான தகவல்கள் இடம் பெற்றுள்ளன. எதிர்காலத்தில் மத்திய அரசு அதிகாரிகள் செய்யும் சட்டவிரோத நடவடிக்கைகளைத்  தடுக்க உதவும் வகையில் பல்வேறு தகவல்களை வழங்கியுள்ளது.


-ழகரன்


No comments:

Post a Comment