தமிழகத்தில் மதக் கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் நடத்தப்படும் பாரதீய ஜனதாவின் ‘வெற்றிவேல்’ யாத்திரைக்கு தடை விதிக்க வேண்டும்

காவல்துறையில் திருமாவளவன் புகார்சென்னை,அக்.31, தமிழக டிஜிபி அலுவலகத்தில் விடுதலைச் சிறுத் தைகள் கட்சித் தலைவர் திருமா வளவன் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:


பாஜ சார்பில் நடத்தப்படவுள்ள ‘வெற்றிவேல் யாத்திரை’ தமிழ் நாட்டில் மதக்கலவரத்தை ஏற்படுத் தும் நோக்கில் திட்டமிடப்பட் டுள்ளதா என்ற அய்யம் எழுந் துள்ளது. எனவே, இதற்கு தமிழக காவல் துறை அனுமதியளிக்கக் கூடாது என்று விடுதலை சிறுத் தைகள் கட்சியின் சார்பில் கேட் டுக்கொள்கிறோம்.


கடந்த சில மாதங்களாகவே தமிழ்நாட்டில் சமய நல்லிணக் கத்தை சீர்குலைக்கும் விதமாக பல் வேறு நடவடிக்கைகளை பாஜவும், அதன் ஆதரவு அமைப்புகளும் மேற்கொண்டுள்ளன. இப்போது ‘வெற்றி வேல் யாத்திரை’ என்ற பெயரில் நவம்பர் 6 முதல் டிசம்பர் 6 வரை ஒரு மாத காலத்திற்கு பரப் புரை பயணமேற்கொள்ளப் போவதாக அறிவித்துள்ளனர்.


அரசியல் ஆதாயத்திற்காக மக் களை பிளவுப்படுத்தி மோதலை உருவாக்கும் நோக்கத்தோடு திட்ட மிடப்பட்டுள்ள பாஜவின் வெற்றி வேல் யாத்திரைக்கு அனுமதி வழங் கினால் இதுவரை தமிழக காவல் துறை எடுத்த முயற்சிகள் எல்லாமே பயனற்றதாகிவிடும்.


எனவே வெற்றிவேல் யாத் திரைக்கு அனுமதி வழங்க கூடாது. இவ்வாறு மனுவில் கூறப்பட் டுள்ளது.


பின்னர் செய்தியாளர்களிடம் எழுச்சித் தமிழர் தொல்.திருமா வளவன் கூறியதாவது:


வேல் யாத்திரை மூலம் ஜாதி, மத வெறியை தூண்டி தமிழகத்தில் கலவரத்தை ஏற்படுத்த பாஜவும் இந்துத்துவ சக்திகளும் முயற்சி செய்கின்றன. ஜாதியின் பெயரால், மதத்தின் பெயரால் வட மாநி லங்களில் எப்படி ஆட்சியை கைப் பற்றினார்களோ அதேபோல தமி ழகத்தில் இந்த உத்தியைக் கையாளு கிறார்கள். ஜாதி வெறியை தூண்டும் அசுவத்தாமன், எச்.ராஜா உள்ளிட் டோர் மீது வழக்குப் பதிவு செய்ய எனது பெயரில் புகார் அளிக்கப் பட்டுள்ளது.


திமுக கூட்டணியில் ஒரு பதற் றத்தை உருவாக்க வேண்டும் என்ற நிலையில் பாஜகவினர் செயல்பட்டு வருகின்றனர். இவ்வாறு தொல்.திருமாவளவன் பேசினார்.  


Comments