தமிழகத்திலும், புதுவையிலும் தி.மு.க. - காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றும்:  புதுவை முதல்வர் நாராயணசாமி பேட்டி

மயிலாடுதுறை,அக்.31, 2021இல் தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலை மையிலும், புதுச்சேரியில் காங்கிரஸ்-திமுக கூட்டணி ஆட்சி அமையும் என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார். மயிலாடுதுறையில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, 30.10.2020 அன்று செய்தியாளர் களிடம் கூறியதாவது: 


காங்கிரஸ்-திமுக கூட்டணி புதுச் சேரியிலும், திமுக, காங்கிரஸ் உள் ளிட்ட கட்சிகள் இணைந்து சட்ட மன்ற தேர்தலை சந்திக்க பணிகளை செய்து வருகிறோம். தமிழகத்தில் மு.க.ஸ்டாலினும், புதுச்சேரியில் காங்கிரஸ்-திமுக கூட்டணி ஆட் சியும் அமைவது உறுதி. புதுச்சேரியில்அதிமுக, என்.ஆர்.காங்கிரஸ் ஆகியன எதிர்கட்சிகள் அல்ல. எங்களுக்கு எதிர்கட்சி கிரண்பேடி தான். அவரை சமாளிக்கவே எங்களுக்கு நேரம் சரியாக உள்ளது.  மாநில வளர்ச்சிக்கு எதிராக அவர் தொல்லை அளித்து வருகிறார். ஒருபக்கம் மத்திய அரசின் தொல்லை; மறுபுறம் கிரண்பேடி தொல்லை.இவற்றை வைத்துக் கொண்டு புதுச்சேரியில் 9 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளோம். இவ் வாறு அவர் கூறினார்.


Comments