வட்டிக்கு வட்டி ரத்து திட்டத்தில் விவசாயிகளுக்கு பயிர், டிராக்டர் கடனுக்கு சலுகை கிடையாது : மத்திய அரசு விளக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 31, 2020

வட்டிக்கு வட்டி ரத்து திட்டத்தில் விவசாயிகளுக்கு பயிர், டிராக்டர் கடனுக்கு சலுகை கிடையாது : மத்திய அரசு விளக்கம்


புதுடில்லி,அக்.31, மத்திய அரசு அறிவித்த வட்டிக்கு வட்டி சலுகை, பயிர் மற்றும் டிராக்டர் கடன் களுக்கு பொருந்தாது என மத்திய நிதியமைச்சகம் விளக்கம் அளித் துள்ளது.


கரோனா ஊரடங்கு காலத்தில் வங்கியில் கடன் பெற்றவர்கள் மாதத் தவணையை செலுத்த மார்ச் முதல் ஆகஸ்ட் மாதம் வரை சலுகை அளிக்கப்பட்டது. ஆனால், அந்தச் சலுகையை பயன்படுத்தி கடன் தவ ணையை செலுத்தாத 6 மாதங் களுக்கு வட்டிக்கு வட்டி விதிக்கப் பட்டது.  இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில், ரூ.2 கோடி வரையிலான கடன்களுக்கு வட் டிக்கு வட்டி விதிக்கப்படாது என மத்திய அரசு தெரிவித்தது. அதோடு, சலுகையை முழுவதுமாகவோ, சில மாதங்களுக்கோ பெற்று தவணை யுடன் வட்டிக்கு வட்டி தொகையை செலுத்தியவர்களுக்கு தனி வட்டி போக, கூடுதலாக வசூலிக்கப்பட்ட கூட்டு வட்டித் தொகை நவம்பர் 5ஆம் தேதிக்குள் கடன் தவணை செலுத்தியவர்கள் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் எனவும் மத்திய அரசு அறிவித்தது.


இதைத் தொடர்ந்து, மத்திய நிதி அமைச்சகம் யார், யாருக்கு இந்த சலுகை கிடைக்கும் என கேள்வி-பதிலை கடந்த 26ஆம் தேதி வெளியிட்டது.  சலுகைத் தொகை பெறும் திட்டத்தில், ‘கூட்டு வட்டி மற்றும் தனி வட்டியின் வேறுபாடு’ என்ற இந்த கேள்வி பதிலில் மேலும் சில அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அதில், ‘கரோனா ஊரடங்கு காலத் தில் வேளாண் கடன் திட்டத்தின் கீழ் பயிர், டிராக்டர் கடன் பெற்றவர்கள், விவசாயக் கடன் பெற்றவர்கள் வட்டிக்கு வட்டி சலுகைக்கு தகுதியான 8 பிரிவுகளின் கீழ் வர மாட்டார்கள். எனவே, பயிர், டிராக்டர் கடன் உள்ளிட்ட வேளாண் கடன்கள் வட்டிக்கு வட்டி ரத்து சலுகை பொருந்தது. 


அதே நேரம்,  பிப்ரவரி 29ஆம் தேதியை கணக்கிட்டு, அன்றைய தினத்தில் இருந்து கிரெடிட் கார்டு நிலுவைத் தொகை வைத்திருப் பவர்களுக்கு வட்டிக்கு வட்டி ரத்து சலுகை வழங்கப்படும்,’ என கூறப்பட்டுள்ளது. ஏற்கெனவே, அனைத்து வங்கிகள், வங்கி சாராத நிதி நிறுவனங்கள், மத்திய அரசு கூறியதுபோல், ரூ.2 கோடி வரை கடன் பெற்றவர்களுக்கு வட்டிக்கு வட்டி சலுகையை நவம்பர் 5ஆம் தேதிக்குள் நடைமுறைப்படுத்த வேண்டுமென ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது.


No comments:

Post a Comment