தொல்.திருமாவளவன் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கை திரும்பப் பெறக்கோரி அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம்


கிருட்டினகிரி மேற்கு மாவட்டம் ஒசூரில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் எழுச்சி தமிழர் தொல்.திருமாவளவன் மீது மனுதர்மத்தை காரணம் காட்டி போடப்பட்டுள்ள பொய் வழக்கை திரும்பபெற வலியுறுத்தி விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் கனியமுதன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.


திராவிடர் கழகம் சார்பில் மாவட்ட தலைவர் சு.வனவேந்தன்,மனிதநேய மக்கள் கட்சி சார்பில் தலைமை கழக பேச்சாளர் ஒசூர் நவுசாத், விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் ஒசூர் சட்டமன்ற தொகுதி செயலாளர் இராமசந்திரன்,எஸ்.டி.பி.கட்சி சார்பில் மாவட்ட பொதுச்செயலாளர் சபியுல்லா,எ.அய்.எம்.எம் கட்சி மாநில பொதுச்செயலாளர் இம்தியாஸ், தமிழ்நாட்டு கல்வி இயக்கம் ஒப்புரவாளன் ஆகியோர் தொல்.திருமாவளவன் அவர்கள்மீது போடப்பட்டுள்ள வழக்கை திரும்பப் பெற வலியுறுத்தி உரையாற்றினர். இதில் விடுதலை சிறுத்தை கட்சி தோழர்களும் ஆதரவு அமைப்பின் தோழர்களும் கலந்து கொண்டனர்.


Comments