நரம்புக் கோளாறு - சதைப் பிடிப்பு நோய்களுக்கு, நவீன மருத்துவ சிகிச்சை மய்யம் திறப்பு

சென்னை, அக். 31- பல்வேறு நோய்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கும் சென்னையின் முன்னணி மருத்துவமனைகளில் ஒன்றான வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் (SIMS Hospital) நரம்பு மற்றும் தசை தொடர்பான நோய்களுக்கு அதிநவீன சிகிச்சை அளிக்க தனிச் சிறப்பு மய்யம் 29.10.2020 அன்று தொடங் கப்பட்டுள்ளது. நரம்புக் கோளாறு மற்றும் தசை இறுக்கப் பாதிப்பு களால் ஏற்படும் டிஸ்டோனியா (Dystonia) மற்றும் ஸ்பாஸ்டிசிட்டி (Spasticity) போன்ற நோய்களுக்கு, புதுவிதமான சிகிச்சை, இந்தப் புதிய மையத்தின் மூலம் வழங்கப்பட உள்ளது.


இதுவரை வேறு எங்கும் இல்லாத வகையில் முதன்முறையாகத் தொடங்கப்படும் - ‘பாண்ட்ஸ்’ (BONDS - BOtulinum ToxiN in Dystonia & Spasticity) என்னும் பெயரிலான இந்த மையத்தை தமிழக அரசின் குடும்ப நலம் மற்றும் நல்வாழ்வுத்துறை அமைச்சரான மருத்துவர் சி. விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் எஸ்.ஆர்.எம். குழுமத்தின் தலைவரான ரவி பச்சமுத்து, இந்த மய்யத்தின் சிகிச்சை முறைகளில் பங்காற்ற உள்ள சிறப்பு மருத்துவர் கள் உள்ளிட்ட பிற முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.


இந்தியாவில் கரோனா இறப்புகள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன: ஆராய்ச்சி தகவல்


சென்னை, அக். 31-  தமிழ்நாடு முழுவதிலும் மக்கள் கரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ள முகமூடி அணிவதைப் பற்றிய ஒட்டுமொத்த இணக்கத்தைப் புரிந்து கொள்ளும் நோக்கத்தில் ஒரு இலாப நோக்கற்ற அமைப்பான ஏக்தேஷ் மற்றும் ஒரு முன்னணி ஆராய்ச்சி நிறுவனமான க்ரவுனிட் உடன் இணைந்துஒரு கணக்கெடுப்பை நடத்தியுள்ளது.


நாட்டில் முழுமையான திறப்பை எதிர்நோக்கும் நிலையில், மாநிலத்தில் பாதுகாப்பான நடைமுறைகளுக்கு ஒரு குறைந்த அள விலான இணக்க நிலையே நிலவுகிறது என்று அவர்களின் அறிக்கை பரிந்துரைக்கிறது. தமிழ்நாட்டில் கோவிட்-19அய் தடுப்பதற்காக முகமூடி பயன்பாட்டை95% மக்கள் அறிந்திருந்தாலும், 49% பேர் மட்டுமே முகமூடிஅணிவதற்கு இணங்கி பின்பற்றுகிறார்கள்.


இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திவரும் பூனம்கவுல் கூறுகையில், “இந்தியாவின் கோவிட்-19 இறப்புகள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன.  உண்மையில்,  சமீபத்திய அறிக்கைகளின் படி, கரோனா வைரஸ் இறப்புகள் 100,000அய் தாண்டிவிட்டதாக இந்தியாவின் சுகாதார அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த உலகளாவிய சுகாதார அவசரத்திற்கு மத்தியில், பெரும்பாலான மக்கள் முகமூடிகளை அணிவதன் முக்கியத்துவம் தொடர்பான விழிப்புணர்வை கொண்டிருந்தாலும், இதற்கான இணக்கம் இன்னும் மிகக் குறைவாகவே உள்ளது.  அப்னாமாஸ்க் என்ற எங்கள் சமூக முன்முயற்சி மூலம், முகமூடிகள் அணிந்திருப்பது பற்றிய விழிப் புணர்விலிருந்து அதன் விடாமுயற்சியான இணக்கத்தை நோக்கி கொண்டு செல்வதற்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.


மின்னணு சாதனங்களின் சிறப்பு விற்பனை திட்டம்


கோயம்புத்தூர், அக். 31- மின்னணு சாதனங்களின முன்னணி விற்பனை நிறுவனமான ஹெயர் (Haier) வீட்ட உபயோக சாதனக்ஙளின் சிறப்பு விற்பனையை அறிவித்துள்ளது. கரோனா நோய் தொற்றில் இருந்து மக்கள் மீண்டும் வரும் இக்காலக்கட்டத்தில் நுகர்வோர்களுக்கு எங்களின் புதுமையான தயாரிப்புகளைக் கொண்டு சேர்த்தும், புத்தாக்கான மின்னணு வீட்டு உபகரணங்களை சிறப்பு சலுகைகளுடன் விறப்னை செய்து வாடிக்கையாளர்களின் தேவையை நிறைவேற்றுகிறோம் என இந்நிறுவனத்தின் இந்திய பிரிவின் தலைவர் எரிக் பிராக்நான்சா தெரிவித்துள்ளார்.


Comments