1992 இல் பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனை வருமே, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் இல்லை என்று கூறி விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்ற லக்னோ சி.பி.அய். நீதிமன்றத்தின் தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கக் கூடியது மட்டுமல்ல - ஏற்கத்தக்க தீர்ப்பாக மக்கள் மன்றத்தாலும், நடுநிலையாளர்களாலும் ஒருபோதும் கருதப்பட மாட்டாது!
தந்தை பெரியார் அவர்கள் நம் நாட்டு நீதிமன்றங்கள் பெரிதும் சட்ட கோர்ட்டுகளே (Courts of Law) தவிர, நீதிக் கோர்ட்டுகள் (Not Court of Justice) அல்ல'' என்று கூறுவார். அதனை உறுதிப் படுத்துவதாகவே 28 ஆண்டுகளுக்குப் பிறகு வந்த இந்த நீதிமன்றத் தீர்ப்பு அமைந்துள்ளது.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்.
சென்னை
30.9.2020
No comments:
Post a Comment