முதுபெரும் பெரியார் பெருந் தொண்டரும், அரசுப் பணி ஓய்வு பெற்றபின் 'விடுதலை' நாளேட்டில் ஆசிரியர் குழுவில் இணைந்து அருந்தொண்டாற்றியவரும், குடந்தை கழகப் பொறுப்பில் இணைந்து பணிபுரிந்தவருமான மானமிகு ஆ. பிழைபொறுத்தான் (வயது 78) அவர்கள் இன்று (30.9.2020) காலை 7 மணியளவில், மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறோம்.
அமைதியும், அடக்கமும் நிறைந்த கொள்கை வீரர். அவரது இழப்பின் மூலம் ஓர் இலட்சியத் தோழரை இழந்துள்ளோம்.
அவரது மறைவால் வாடும் அவரது அன்பு மகள்கள் சிவகாமசுந்தரி, மாதவி ஆகியவர்களுக்கும், குடும்பத் தினருக்கும் நமது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
அவருக்கு நமது வீர வணக்கம்! .
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்.
சென்னை
30.9.2020
குறிப்பு: கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் அவரது மூத்த மகள் சிவகாமசுந்தரி அவர்களிடம் தொலைபேசி வழியாக இரங்கலும், ஆறுதலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment