செய்தியும், சிந்தனையும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 30, 2020

செய்தியும், சிந்தனையும்....!

தண்டனை உறுதி!
வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த 28 ஆம் தேதி தமிழ்நாடெங்கும் மதச்சார்பற்ற கூட்டணி சார்பாக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற 3500 பேர்மீது (சென்னையில் மட்டும்) ஊரடங்கு விதிகளை மீறியதாக 4 பிரிவுகளில் வழக்கு.


ஏன் சென்னையோடு நிறுத்திக் கொள்ளப்பட்டது; தமிழ்நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கில் பங்கு கொண்டனரே அத்தனைப் பேர்மீதும் வழக்குப் போட வேண்டியதுதானே!
இந்த வழக்கில் தண்டனை கிடைக்கிறதோ இல்லையோ, மத்திய அரசின் வேளாண் சட்டங்களை ஆதரிக்கும் அ.தி.மு.க. அரசுக்குத் தேர்தலில் மக்கள் தண்டனை கொடுப்பது மட்டும் உறுதியோ, உறுதி!


நட்ட கல்லும் பேசுமோ!


தமிழ்நாட்டில் கோவில்களில் உள்ள பழங்கால சிலைகள் திருடுப் போகின்றன - வெளிநாடுகளுக்குக் கடத்தப்படுகின்றன. அப்படி திருடு போகும் சிலைகளின் பட்டியலை அனுப்புமாறு இந்து சமய அறநிலையத் துறை ஆணை.
அடயேப்பா! இந்தக் கோவில் கடவுள்களுக்கெல்லாம் எப்படிப்பட்ட சக்திகள் இருக்கின்றன என்று உருகி உருகி எழுதுவதிலும், பேசுவதிலும் மட்டும் குறைச்சல் இல்லை. அந்த சக்தி(?) வாய்ந்த கடவுள்களை எப்படி கடத்த முடியும் என்று புத்தியைச் செலுத்தினால் சக்தியாவது - புடலங்காயாவது என்ற குட்டு உடைபட்டுப் போய்விடும்!
நட்ட கல்லைத் தெய்வமென்று பூஜிப்போரைக் கேலி செய்த சித்தர் பாடல்தான் நினைவிற்கு வருகிறது.


அவனன்றி கரோனா வந்தது எப்படி?


கரோனா தொற்று நீங்கிட காஞ்சிபுரம் கூழமாத்தூரில் பரிகாரம்.
அவனன்றி ஓரணுவும் அசையாது என்றால்,  கரோனா வந்தது எப்படி? காசி விசுவநாதன் கடவுளுக்கே முகக்கவசம் போட்ட பின் பரிகாரப் பூஜை எங்கே இருந்து வந்தது? அடுத்தகட்ட வன்முறை
மதுரா - கிருஷ்ணஜென்ம பூமி கமிட்டித் தொடர்பாக அகில இந்திய சாதுக்கள் சபை மதுராவில் கூடுகிறது.


ராமர் ஜென்ம பூமிக்கு ஜே! அடுத்து கிருஷ்ண ஜென்ம பூமிக்கு ஜே, ஜே! நரேந்திர மோடி ஆட்சிக்கு ஜே! ஜே!! (ஜி.டி.பி. -23%) நினைவிருக்கட்டும்.


No comments:

Post a Comment