கழகத் தலைவர்
உடல்நிலை பாதிப்பா?
அற்பர்களின் சந்தோஷம்!
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சென்னை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக பொய்யான (திணீளீமீ) - புதிய தலைமுறைத் தொலைக்காட்சி இலட்சினை யைப் பயன்படுத்தி சமூக வலைத்தளத்தில் அற்பத்தனமாகப் புரளி கிளப்பப்பட்டு வருகிறது - இதற்கு முன்பும் இதனைச் செய்ததுண்டு.
காவிக் கும்பலின் ஜம்பம் தமிழ்நாட்டில் எடுபடவில்லை என்றவுடன், அதற்குக் காரணம் தந்தை பெரியார் என்பதால், அவர் சிலையைச் சிறுமைப்படுத்தும் வேலையில் ஈடுபட்டு வருகின்றனர்.
பெரியார் மறைந்து 47 ஆண்டுகள் ஆகியும், அந்தப் பணியை இவர் தொடர்ந்து வேகமாகச் செய்து வருகிறாரே என்ற ஆத்திரத்தில், அற்ப சந்தோஷத்தில் கயவர்கள் மிதக்கட்டும், மிதக் கட்டும். கழகத் தோழர்கள், பொதுமக்கள் பொருட் படுத்தவேண்டாம். கழகத் தலைவர் பெரும்பாலும் நாள்தோறும் காணொலியில் கருத்துமழை பொழிந்துகொண்டும், அறிக்கைகளை எழுதிக் கொண்டும்தான் இருக்கிறார் என்பதைத் தெரி வித்துக் கொள்கிறோம்.
- கலி.பூங்குன்றன்,
துணைத் தலைவர், திராவிடர் கழகம்.
No comments:
Post a Comment