தமிழர் தலைவர் தொலைபேசியில் இரங்கல்
மறைந்த பெரியார் பெருந் தொண்டர் உரத்தநாடு பேபி. ரெங்கசாமி அவர்களின் மூன்றாவது மகன் உரத்தநாடு வர்த்தக சங்க துணைத் தலைவர் பேபி ரெ. குமார் (வயது 54) உடல் நலக் குறைவால் 28.9.2020 அன்று இரவு மறைவுற்றார்.
செய்தி அறிந்த கழகத் தலைவர்,தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மறைந்த குமார் அவர்களின் சகோதரர், உரத்தநாடு நகர திராவிடர் கழகத் தலைவர் பேபி ரெ. ரவிச்சந்திரன் அவர்களிடம் தொலைபேசியில் இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்தார்.
29.9.2020 அன்று காலை 11 மணியளவில் எந்தவித மூடச் சடங்குகளும் இல்லாமல் உடல் எரியூட்டப்பட்டது. கழகப் பொதுச் செயலாளர் இரா. ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் இரா. குணசேகரன், மாவட்டச் செயலாளர் அ. அருணகிரி, பெரியார் அறக்கட்டளை உறுப்பினர் கு. அய்யாத்துரை, ஒன்றியத் தலைவர் த. ஜெகநாதன், மாநில வீர விளையாட்டுக் கழக செயலாளர் நா. இராமகிருஷ்ணன், பூவை. இராமசாமி, நெல்லுப்பட்டு
அ. இராமலிங்கம், நெடுவை வெ. விமல், தோ. தம்பிக்கண்ணு, நா. பிரபு, பு.செந்தில்குமார், ஒக்கநாடு சேலையூர், வீரத்தமிழன் தென்னகம், மணிராசு, தன்மானம், பாலகிருஷ்ணன், மணி நகர இளைஞரணி செயலாளர் பேபி ரெ. ரமேஷ், பேபி ரெ. ராஜா, வர்த்தக சங்கத் தலைவர் மணி சுரேஷ்குமார், நகர செயலாளர் ரெ. ரஞ்சித்குமார், உரத்தநாடு மாதவன் உள்ளிட்ட உறவினர்கள், நண்பர்கள், அனைத்து அரசியல் கட்சி பொறுப்பாளர்கள் ஆகியோர் இறுதி நிகழ்வில் பங்கேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
No comments:
Post a Comment